வியாழன், 28 அக்டோபர், 2010

தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாறும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


சென்னை, அக். 27: தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாறும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.  ÷சென்னையில் ராஜீவ் காந்தி - வாழப்பாடி ராமமூர்த்தி நல அறக்கட்டளை சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 8-வது நினைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  ÷மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினார்கள்.  ÷பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:  ÷தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முதன்மை இயக்கமாக மாற்ற வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார் போன்ற தலைவர்கள் பாடுபட்டனர். அவர்கள் வளர்த்த கட்சியை தங்கபாலு முடக்கி வைத்துள்ளார்.  ÷தமிழக காங்கிரஸ் தலைமை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்று வலிமை மிக்க கட்சியாக விரைவில் மாறும்.  ÷ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கியவர்கள் மீது போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ÷வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தன் மீதான தவறுகளை மறைப்பதற்காகவே சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்றார்.  ÷தங்கபாலு கருத்து: இளங்கோவன் கருத்து குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் கேட்டபோது, "எனது செயல்பாடுகளை சோனியா காந்தியே பாராட்டியுள்ளார். அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை' என்றார்.  ÷வாழப்பாடி ராமூர்த்தியின் 8-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தங்கபாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துக்கள்

சுவர்க்கோழி ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிறதே! காங். ஏன் சும்மா இருக்கிறது? அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 3:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக