தலையங்கம்: பிரிவினைவாதம் ஏற்புடையதல்ல!
First Published : 29 Oct 2010 02:12:58 AM IST

காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா ஜிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் இம்மாதம் 21-ம் தேதி காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடத்த அனுமதி தந்துவிட்டு, அதில் பேசிய பேச்சுகளைப் பிரசுரிக்கவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதித்துவிட்டு அதன் பிறகு பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் சுதந்திரம் கேட்கிறார்கள், இதைப் பல்லாண்டுகளாகக் கேட்கிறார்கள். எனவே அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, இதற்காக அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும், ஆதரவு தர நான் தயார் என்று பேசியிருக்கிறார் அருந்ததி ராய். பொறுப்பான எழுத்தாளர்களும், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் விளம்பரத்துக்காக தேசநலனுக்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் சுதந்திரம் என்கிற பெயரில் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டுமா என்கிற கேள்வி நிச்சயம் எழுகிறது. பிரிவினைவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை என்று பெருமிதப்படுவது தடை செய்யப்பட வேண்டியதும் தண்டனைக்குரியதும் இல்லாவிட்டாலும் தேசவிரோதச் செயல்தான் என்பதை "தினமணி' அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதிவு செய்ய விரும்புகிறது. "உரிமை' என்கிற பெயரில் தேசியக் கடமையை மறந்துவிட முடியாது. கூடாது. காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை. காஷ்மீர் மக்கள் நிஜமாகவே பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பவர்களாக இருந்திருந்தால் கடந்த ஜனவரி 2009-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும், தடையையும் மீறி வாக்களிக்கவே வந்திருக்கக்கூடாதே? தேர்தலை அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை என்பதை உலகமே பார்த்து வியந்ததே? அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த அத்தனை சமஸ்தானங்களும், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. 1947, ஆகஸ்ட் 4-ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தானிய அதிபர் முகம்மது அலி ஜின்னா, பலுஜிஸ்தான் அரசர் கலாட் கான் ஆகியோர் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தப்படி ஒரே ஒரு விதிவிலக்காக பலுஜிஸ்தான் மட்டும் 1876-ல் இருந்ததுபோல ஒரு சுதந்திர நாடாக இயங்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 1948 ஜனவரியில் கலாட் கான் கராச்சிக்கு வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாகப் பாகிஸ்தானுடன் பலுஜிஸ்தானை இணைக்க கையொப்பமிடச் செய்தனர். அன்றுமுதல் இன்றுவரை பலுஜிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்பற்றி எந்தவொரு பாகிஸ்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் பேசுவதில்லை. பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் மன்னிக்கப்படுகின்றனவே, ஏன்? இந்தியாவுக்கு வருவோம். 1947-ல் வேறு எந்த சமஸ்தானத்துக்கும் இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ தரப்படாத சிறப்பு அந்தஸ்தைக் காஷ்மீருக்கு அளிக்க நாம் வாக்குறுதி அளித்ததன் பேரில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசப்படுத்த சற்றும் எதிர்பாராதவிதமாக ராணுவத்தினரை ஊடுருவச் செய்தபோது இந்தியப் படைகள் அவர்களைப் புறமுதுகிட்டு ஓட விரட்டியது. லடாக், புஞ்ச் பகுதிகளிலிருந்து அவர்களை விரட்டியடித்து முஜபராபாத்தை நெருங்கும்போது, ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிரச்னையை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்று, போர் நிறுத்தத்தை அறிவித்தார். பண்டித நேருவின் பெருந்தன்மை, அந்த மாமனிதரின் நல்லெண்ணம் இப்போது பாஜகவினரால் விமர்சிக்கப்படும்போது வேதனையாக இருக்கிறது. தனது நல்லெண்ணம் ஒரு தீராப்பழியைத் தேடித்தரும் என்று அந்த ஆசிய ஜோதி நிச்சயம் நினைத்திருக்க மாட்டார். அப்போது மட்டும், பண்டித நேரு ராணுவத்தைத் தடுக்காமல் இருந்திருந்தால் இன்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து ஊடுருவச் செய்ய பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் பகுதியே இருந்திருக்காது. பண்டித நேரு மட்டும், பாகிஸ்தானிலிருந்து அடித்து விரட்டப்பட்ட சிந்திகளையும், பஞ்சாபிகளையும் காஷ்மீரில் குடியேற்றி இருந்தால் இன்று "காஷ்மீரியாட்' பற்றி யாரும் பேசியே இருக்க முடியாது. பண்டித நேரு என்ன இலங்கை அதிபர் ராஜபட்சவா, சிறுநரித்தனமாகச் செயல்பட? கடந்த 63 ஆண்டுகளில் காஷ்மீர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்க இந்தியா எப்போதாவது, ஏதாவது முயற்சி செய்திருக்கிறதா? இலங்கையில் தமிழர்கள் எல்லா உரிமையும் மறுக்கப்பட்டு, சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதுபோல ஒரு நிலைமையை இந்தியா காஷ்மீரத்தில் உருவாக்கி இருக்கிறதா? காஷ்மீர் மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, செய்யத் தொழில், கல்வி இவையெல்லாம் மறுக்கப்பட்டு இலங்கையில் ஈழத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்ததுபோல நாம் நடந்து கொண்டதுண்டா? பிரிவினைவாதம் என்பது பெருவாரியானவர்களின் கோரிக்கை அல்ல. பஞ்சாபில் "காலிஸ்தான்' கேட்டபோது அதை இன்னொரு காஷ்மீர் என்று வர்ணித்தார்களே, இப்போது பஞ்சாபில் பிரிவினைவாதம் எங்கே போயிற்று? ஒருசில கலகக்காரர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, பெருவாரியான பொதுஜனம் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருப்பது இயல்பு. நான்கு பேர் வன்முறையில் ஈடுபடும்போது நானூறு பேர் அவர்களுடன் இணைவதும் இயல்பு. இதற்குப் பயந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஓடிவிட முடியாது. அடக்கத்தான் வேண்டும். காஷ்மீரில் தனிநாடு கேட்கிறார்கள் என்று காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கேட்கிறார்கள் என்று அந்த மாநிலங்கள் பிரிந்து போகட்டும் என்று நாம் விட்டுவிட்டால், மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரேயும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும், ஏன், வன்னிய நாடு கோரிக்கையுடன் நமது டாக்டர் ராமதாசும்கூடத்தான் தனிநாடு கேட்பார்கள். எல்லா மாநிலங்களையும் தனி நாடுகளாக்கிவிட்டு நாமும் ஓர் ஆப்பிரிக்கா ஆகிவிடப் போகிறோமா? இந்தியாவைப் பொறுத்தவரை, நமது பிரச்னைகள் அனைத்தும் மாநிலப் பிரச்னைகள். ஆனால், இதற்கான தீர்வுகள் தேசியத் தீர்வுகள். 2020-ல் உலக வல்லரசு என்று நாம் காணும் கனவு நனவாக வேண்டுமானால் இந்தியா ஒரு யூனியனாக ஒன்றுபட்டு இருந்தாக வேண்டும். இதில் பிரச்னைகள் இருக்கலாம். தவறுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டுமே தவிர, பிரிவினை அல்ல தீர்வு. மனித உரிமை மீறல் காஷ்மீரில் இல்லையா? இருக்கிறது. அதைவிட அதிகமான மனித உரிமை மீறல் இலங்கையில் தமிழர்கள்மீது தொடுக்கப்படுகிறது. பலுஜிஸ்தானில் கொடூரமான அடக்குமுறையும் மனித உரிமை மீறலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அருந்ததி ராய்கள் அங்கே போய் ஏன் பேசுவதில்லை? காரணம், இங்கே சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது. அதற்காக வாய்க்கு வந்ததைப் பேசி விடுவதா? காஷ்மீரைப் பிரச்னையாக்கி இந்தியாவிலிருந்து பிரித்து மேற்கு நாடுகளின் ராணுவத் தளமாக்க வேண்டும் என்கிற முயற்சியின் ஒரு பகுதிதான், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கமளிப்பது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எந்தவித உதவியும் செய்யத் தயாராக இருக்கிறது. இலங்கையைத் தனது நட்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்ட சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி, காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கத் தூண்டுகிறது. முதல்வர் ஒமர் அப்துல்லாவும், எதிர்க்கட்சித் தலைவி மெகபூபா முஃப்தியும் தங்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். போதாக்குறைக்கு, தீவிரவாதத் தலைவர்களும் அவர்களை ஆதரித்து விளம்பரம் தேடிக்கொள்ள முயலும் அருந்ததி ராய்களும்... இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்திய சக்திகளுக்குத் துணைபோகத் துடிக்கிறார்களே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத, பிரிக்கப்படக் கூடாத பகுதி. இதில் எந்தவித சமரசமும் ஏற்புடையதல்ல. சுயவிளம்பரத்துக்காக தேசநலனைக் கைகழுவும் போக்கும்தான்!
கருத்துக்கள்


By அழகு
10/29/2010 3:21:00 AM
10/29/2010 3:21:00 AM

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 3:05:00 AM
10/29/2010 3:05:00 AM

பயன்படுத்திக்கொண்டு காலம் காலமாக ஊழல் கட்சிகள் ஆட்சி புரிந்து இனப்படுகொலைகளைச் செய்து மூடி மறைத்துத் தங்கள் நலனை மட்டும் பெருக்கிக் கொள்கிறார்கள். உரிமைப்பகுதிகள ்இணைந்த கூட்டரசு என்னும பொழுது் எந்தச சிக்கலும் இல்லை. படையை அனுப்பச் செய்ததே நேருதான். அவ்வாறிருக்க படையைத்தடுத்திராவி்ட்டால என்பது பொருந்தவில்லை. ஐ.நா.விற்கு எடுத்துச் சென்று பன்னாட்டுச் சிக்கலாக மாற்றியவரும் நேருதான். காசுமீரில் 45 விழுக்காடு மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும பொழுது அவர்களும் மனத்தளவில் பிரி்ந்து இருக்கையில் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சிக்கலைக் களையவேண்டுமேயன்றிப் படைவீரர்கள் மூலமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டு

By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 3:03:00 AM
10/29/2010 3:03:00 AM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:18:00 PM
10/29/2010 4:18:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:16:00 PM
10/29/2010 4:16:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 4:15:00 PM
10/29/2010 4:15:00 PM


By fancy
10/29/2010 3:47:00 PM
10/29/2010 3:47:00 PM


By fancy
10/29/2010 3:42:00 PM
10/29/2010 3:42:00 PM


By fancy
10/29/2010 3:42:00 PM
10/29/2010 3:42:00 PM


By fancy
10/29/2010 3:41:00 PM
10/29/2010 3:41:00 PM


By rc jayakumar
10/29/2010 3:24:00 PM
10/29/2010 3:24:00 PM


By Chozan
10/29/2010 3:11:00 PM
10/29/2010 3:11:00 PM


By M. Annamalai
10/29/2010 2:51:00 PM
10/29/2010 2:51:00 PM


By indhu
10/29/2010 2:45:00 PM
10/29/2010 2:45:00 PM


By veera hindu
10/29/2010 2:41:00 PM
10/29/2010 2:41:00 PM


By ravi
10/29/2010 2:34:00 PM
10/29/2010 2:34:00 PM


By madhurai muthu m
10/29/2010 2:25:00 PM
10/29/2010 2:25:00 PM


By Jegan
10/29/2010 2:18:00 PM
10/29/2010 2:18:00 PM


By b.yani
10/29/2010 2:16:00 PM
10/29/2010 2:16:00 PM


By mohamed ali
10/29/2010 12:22:00 PM
10/29/2010 12:22:00 PM


By Rajarajan
10/29/2010 12:11:00 PM
10/29/2010 12:11:00 PM


By vallinayagam
10/29/2010 11:21:00 AM
10/29/2010 11:21:00 AM


By vallinayagam
10/29/2010 11:19:00 AM
10/29/2010 11:19:00 AM


By vallinayagam
10/29/2010 11:19:00 AM
10/29/2010 11:19:00 AM


By ilyas karai
10/29/2010 11:14:00 AM
10/29/2010 11:14:00 AM


By sathiya
10/29/2010 10:56:00 AM
10/29/2010 10:56:00 AM


By POTHU JANAM
10/29/2010 10:24:00 AM
10/29/2010 10:24:00 AM


By Anti terrorist
10/29/2010 10:08:00 AM
10/29/2010 10:08:00 AM


By Anti terrorist
10/29/2010 10:07:00 AM
10/29/2010 10:07:00 AM


By தஞ்சை ராஜு
10/29/2010 9:47:00 AM
10/29/2010 9:47:00 AM


By J.Venkat
10/29/2010 9:43:00 AM
10/29/2010 9:43:00 AM


By A.Kumar
10/29/2010 9:31:00 AM
10/29/2010 9:31:00 AM


By Ramlaks
10/29/2010 9:28:00 AM
10/29/2010 9:28:00 AM


By Ramakrishnan
10/29/2010 9:20:00 AM
10/29/2010 9:20:00 AM


By murugiah
10/29/2010 9:13:00 AM
10/29/2010 9:13:00 AM


By J.Venkat
10/29/2010 9:07:00 AM
10/29/2010 9:07:00 AM


By WILLIAMS R
10/29/2010 9:01:00 AM
10/29/2010 9:01:00 AM


By S Raj
10/29/2010 8:52:00 AM
10/29/2010 8:52:00 AM


By s.radhakrishnan
10/29/2010 7:53:00 AM
10/29/2010 7:53:00 AM


By வீர ஹிந்து முத்துபேட்டை
10/29/2010 7:08:00 AM
10/29/2010 7:08:00 AM


By வீர ஹிந்து முத்துபேட்டை
10/29/2010 6:52:00 AM
10/29/2010 6:52:00 AM


By pandiyan
10/29/2010 6:37:00 AM
10/29/2010 6:37:00 AM


By வீர ஹிந்து முத்துபேட்டை .
10/29/2010 6:34:00 AM
10/29/2010 6:34:00 AM


By SIRAKU
10/29/2010 5:02:00 AM
10/29/2010 5:02:00 AM


By indian
10/29/2010 4:59:00 AM
10/29/2010 4:59:00 AM


By அழகு
10/29/2010 3:21:00 AM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இணையப் பொறுப்பாளர்களே!என்ன அளவுகோல் வைத்துக கருத்துகளை வெட்டுகிறீர்கள். நடுநிலை தவறாதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
திரு பேன்சி அருந்ததிராய்அவர்களின் பேச்சுகளைக் குறிப்பிட்டுள்ளார். தினமணி அவரது முழு்ப்பேச்சையும் வெளியிட்டு அதன் மூலம் நடுநிலையுடன் நடந்து கொண்டு வாசகர்கள் உண்மை நிலையை அறிய உதவ வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 4:18:00 PM meel padhivu
படையை அனுப்பச் செய்ததே நேருதான். அவ்வாறிருக்க படையைத்தடுத்திராவி்ட்டால என்பது பொருந்தவில்லை. ஐ.நா.விற்கு எடுத்துச் சென்று பன்னாட்டுச் சிக்கலாக மாற்றியவரும் நேருதான். காசுமீரில் 45 விழுக்காடு மட்டும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும பொழுது அவர்களும் மனத்தளவில் பிரி்ந்து இருக்கையில் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சிக்கலைக் களையவேண்டுமேயன்றிப் படைவீரர்கள் மூலமல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 3:05:00 AM மீள்பதிவு By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 4:16:00 PM 3aam padhivu 
சரி. ஆனாலும் சரியல்ல. பிளவுபட்டுப் போவது யாருக்கும் நல்லதல்ல. தனித்திருந்து பாக். படையெடுப்பால்தான் காசுமீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டது. அதே நேரம், இந்தியா கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற் வில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு. தேசிய இனங்களின் கூட்டரசாக நம் நாடு மாற வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சியும் வலிமையும் ஏற்படும்.நடைமுறையில் ஒற்றையாட்சி முறை ல்மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு காலம் காலமாக ஊழல் கட்சிகள் ஆட்சி புரிந்து இனப்படுகொலைகளைச் செய்து மூடி மறைத்துத் தங்கள் நலனை மட்டும் பெருக்கிக் கொள்கிறார்கள். உரிமைப்பகுதிகள் இணைந்த கூட்டரசு என்னும பொழுது் எந்தச சிக்கலும் இல்லை அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 3:03:00 AM மீள்பதிவுBy Ilakkuvanar Thiruvalluvan 10/29/2010 4:15:00 PM 3ஆம் பதிவு
They may live in kashmir, but they do not belong to our country. they are only invaders from other land. when they invaded us, they came with swords, guns and cannons, but not with any land. they can not claim any thing that does not belong to them. remove article 370 and allow people from other parts to live there, as in other states of india. the problem will be solved quickly. some will say this will disturb the identity of kashmir.the identity was lost on the day, the invasion occured. 
Nehru done a greate mistake to took the Kashmir issue to the United Nations thro V.K.Krishnamenon. He might have been ordered our forces to liminate our enemy instead of discussion in the United Nations. speaches like Arunthatirroy should be banned and punished.
கொள்ளிக்கட்டை நம் வீட்டை சேர்ந்தது என்பதற்க்காக அதை முதுகு சொறிய பயன்படுத்த முடியாது. பிரிவினையை எதிர்த்து பேசுவது மட்டு தான் தேசிய கடமையாக தினமணி கருதுகிறதா? ஒருவர் ஒரு கருத்தை எதிர்த்தால் அதை மற்றறெருவர் ஆதரிப்பதில் என்ன தவறு? காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது குரல்வளையை நெரிக்கிறது என்கிறவாதம் பாதிதான் உண்மை என்றால் தினமணி அந்த உண்மைகளை ஏன் வெறியிடவில்லை? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென்றால் நாம் அங்கு குடியேற முடியுமா? முடியாது என்றால் இன்னும் இணையவில்லை என்று தானே பொருள்! எத்தனை கோடிகள் இந்திய மக்களின் வரிப்பணம் அவர்கள் சொந்தம் என்று தைரியமாக கூறிக்கொள்ள முடியாத நிலப்பரப்பிற்க்கு செலவிடப்படுகிறது? அப்படியானால் காஷ்மீர் மக்களை முழு இந்தியர்களாக உணரவைக்க தவறியது யார்? நீண்ட காலமாக ஆட்சிசெய்த நேரு குடும்பம் தானே? தமிழன் இந்தியன் இல்லை தமிழ் நாடு இந்தியாவுக்கு சொந்தம் என்றபது தானே இந்திய அரசின் நிலை? அதே நிலைதான காஷ்மீருக்கும் பொருந்துமா? ”தினமணி ஏன் கருத்துகளை நீக்குகிறது?” 
Our country should be divided into eight states as likeusa and also chngw the name as"UNITED STATES OF INDIA.We learn alession from the past that Freedom should be limited to medias and also to the socalled social activities. If it is not done we shoud become VALLARASU in 2020.
தமிழீழப் படுகொலைகள், காஷ்மிரைப்பற்றி சிந்திக்க மறுக்க வைக்கிறது. 
காஷ்மீரில் பண்டிட்டுகளின் பூமியை காப்பாற்றவே, தமிழர்களின் தமிழ் ஈழம் தாரை வார்க்கப்பட்டுள்ளதோ எனத் தோன்றுகிறது. காஷ்மீரையும், தமிழ் ஈழத்தையும் ஒரு சேரப் பெற வல்லமையுள்ள தலைமை இந்தியாவுக்கு கிடைக்குமா? இல்லை, தமிழர்கள் தனித்தியங்கியே ஈழத்தை பெற வேண்டுமா?. தமிழர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. தமிழர்கள் ஒற்றுமை நீங்கிடில் தமிழர்கள் அனைவருக்கும் தாழ்வு. தமிழீழப் படுகொலை, காஷ்மிரைப்பற்றி சிந்திக்க மறுக்கிறது.
ராணுவ பகுதிகளில் மக்கள் அல்லல் படுவதை பாதிக்கப்படும் மக்கள் மட்டுமே உணர முடியும். ஆதரித்து ஒரு கருத்து இருக்குமாயின் எதிரான கருத்து இருப்பதை ஏன் தினமணி எதிரக்கிறது? அந்த கருத்து தவறாயின் அதை மறுப்பது மட்டுமே நியாயம்! எதிராக கருத்து கூடாது என்பது சர்வதிகாரமே! 
Hates off to the Congratulation.Editorial'Partition is not acceptable' deserves appriciation.Genarosity of Pandit Nehru was misunderstood and critisized by BJP is well mentioned inthe editorial. Ado of peoples like Arunthathi Rai is an attempt to gain cheap popularity.Let the editorial make them to wake up from their fools' paradise
Print media like Dinamani is continued to give preaching. Country's resources are drained for nothing but enjoying by J&K with 370 article but at the same time other state citizens are barred to engage any business,buying movable/immovable property. Finding falt with Nehru,Indira are nothing but wasting time. Already 60 years passed. Either repeal 370 or give up Kashmir so that country will develop. For the sake of false prestige do not preach. Let Union of India conduct referendum and Kashmiris decide and leave rest of India to get free from burden of saving and dynasty rule of Abdullahs. Advise Practically what is to be done to get relieved from Kashmir issue and not required preaching. Enough is enough. See one of the Army men how Kashmiris enjoy at our cost. 
Wonderful article.Shabhas Dinamani.
kasmir bharatha thaeen thalai pakuthi. thalai illatha bharathama?ninaithu parkakavai mudiathu arunthathi rai sudanthiram entra urimail kasmir patti pasiathu erpudaithu alla. 
Ind!an அவர்களே, பாம்பிருக்குல்லையா பாம்பு அதற்க்கு என்ன தான் தடவி கொடுத்தாலும், தடவி கொடுத்த கையை கொத்தாமல் விடாதாம்.. ஆனாலும் தங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்..
குடியிருப்பு பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட காஷ்மீர் மக்களின் "நியாயமான கோரிக்கைகளை" உடனடியாக பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்! அவர்களும் என் சகொதரர்களே! 
ஒவ்வொரு குடும்பதிலும் சட்டாம் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், யாருக்கும் அடங்காமல். அவர்களை கண்டிப்பதும் தண்டிப்பதும் குடும்பதலைவர் கையில்தான் இருக்கிறது.குடும்பதலைவர் நடவடிக்கை எடுத்தே ஆகவென்டும். இல்லாவிடால் குடும்பம் கெடுவது நிச்சயம்..
மதம் மதம் என்று சில நன்றி கெட்ட நாய்கள் என்ன தான் எலும்புத் துண்டுகள் போட்டாலும் கொலைத்துக் கொண்டே தான் இருக்கும்.. அதற்க்கு செவி சாய்த்து நாம் பட்ட பாடுகள் போதும்.. மத வெறிப் பிடித்த நாய்கள்.. பி ஜே பி யை இந்திய மக்கள் அனைவரும் ஒரு மனதாக அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.. 
என் இதயத்தில் குமுறிக் கொண்டிருந்ததை அழகாக கட்டுரையாக தந்து அனைவரின் வாயை பிளக்கவும் அடைக்கவும் வைத்த எனது தினமணிக்கு எனது மன பூர்வமான வாழ்த்துக்கள்..
பாரத முனால் பிரதமர் நேரு நாட்டின் நலத்தை விட தனது இஸ் ஸ்டேட் மென் இமஜெய் காப்பாற்றி கொள்ளவே பாடுபட்டு வந்துள்ளார். பாஜாக நேருவை விமர்சிப்பது முற்றிலும் செர்றியே. 370 ஷறுத் இன்றளவும் இருப்பது திரு நேரு அவர்களின் நாட்டை தாரைவார்க்கும் தாராளமய செயலால் ஏற்பட்ட ஒன்று. அது இன்றளவும் இருந்து பல பிரிவினைவாத பிரச்சனைகளுக்கு உந்துகோலாக இருந்து வருகிறது. ஆசிய ஜோதி! ஆயா கூ%^%^%^ ! என்றெல்லாம் அவரை போற்றி புகழ்ந்தாலும் தனது பெயரும் புகழுகுகாக நாட்டின் நலத்தை பணயம் வைத்தவன் என்று தான் விஷயம் தெரிந்தவர்கள் கூறுவார்கள். காஷ்மீரில் முஸ்லிம் பெண்கள் கற்பழிகபடுகிரார்கள் என்பது பச்சை பொய். இன்று ஊடங்களின் கழுகு பார்வையில் இருந்து எந்த ஒரு குற்றமும் மறைக்க பட முடியாது. முஸ்லிம்கள் பெரிதும் அபிமானம் வைத்திருக்கும் அல்ஜழீர தொலைக்காட்சியே இதுவரை ஒருமுறை கூட கற்பழிப்பு நடந்தாக செய்தி வெளியிடவில்லை. 
10/29/2010 3:21:00 AM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:33:00 AM
10/30/2010 2:33:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:30:00 AM
10/30/2010 2:30:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:29:00 AM
10/30/2010 2:29:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:28:00 AM
10/30/2010 2:28:00 AM


By sreenathan.c.s
10/30/2010 1:43:00 AM
10/30/2010 1:43:00 AM


By Pa.Tha.Velan
10/29/2010 11:28:00 PM
10/29/2010 11:28:00 PM


By Unmai
10/29/2010 11:24:00 PM
10/29/2010 11:24:00 PM


By Pa.Tha.Velan
10/29/2010 11:17:00 PM
10/29/2010 11:17:00 PM


By நாடோடி
10/29/2010 11:00:00 PM
10/29/2010 11:00:00 PM


By நாடோடி
10/29/2010 10:57:00 PM
10/29/2010 10:57:00 PM


By Unmai
10/29/2010 10:44:00 PM
10/29/2010 10:44:00 PM


By M.Sankaralingam
10/29/2010 9:58:00 PM
10/29/2010 9:58:00 PM


By V Gopalan
10/29/2010 9:54:00 PM
10/29/2010 9:54:00 PM


By kamal
10/29/2010 8:56:00 PM
10/29/2010 8:56:00 PM


By mayakannan
10/29/2010 7:20:00 PM
10/29/2010 7:20:00 PM


By Anniyan
10/29/2010 6:45:00 PM
10/29/2010 6:45:00 PM


By Ind!an
10/29/2010 6:39:00 PM
10/29/2010 6:39:00 PM


By chandru
10/29/2010 6:29:00 PM
10/29/2010 6:29:00 PM


By Anniyan
10/29/2010 6:16:00 PM
10/29/2010 6:16:00 PM


By Anniyan
10/29/2010 6:14:00 PM
10/29/2010 6:14:00 PM


By தமிழ் கிறுக்கன்
10/29/2010 4:27:00 PM
10/29/2010 4:27:00 PM