சென்னை, அக்.27: கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரை சிறைக்கு சென்று சந்தித்த வீரபாண்டி ஆறுமுகத்தையும், கம்யூனிஸ்டு கட்சியினரை மிரட்டிய தா.மோ.அன்பரசனையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.அவ்வாறு நீக்கவில்லை எனில் திமுக அரசைக் கலைத்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் குப்புராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாநில குற்றப் புலனாய்வுத் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், அவரை கைது செய்தது. இந்தச் சூழ்நிலையில், சுரேஷ்குமாரை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சைரன் பொருத்தப்பட்ட, தேசியக் கொடி கட்டப்பட்ட அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து சேலம் மாநகர மேயர் உள்ளிட்ட பலரும் கொலையாளி சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர். கொலைக் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ள அமைச்சருக்கும், மேயருக்கும் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரின் நடவடிக்கையின் மூலம், உண்மையான அரசு தப்ப வைத்துவிடுமோ என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருக்கும் தா.மோ. அன்பரசன் சில நாட்களுக்கு முன்பு, 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊருக்கு ஒருவர் உள்ளார். நாங்கள் நினைத்தால், நீங்கள் கூட்டம் போட முடியுமா? அடக்கி வாசியுங்கள் ... இல்லை என்றால் தெருவில் நடமாட முடியாது ... ஜாக்கிரதை' என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். சட்டம்-ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்தால், உடனடியாக சேலம் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவும்; வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால், சட்டம்-ஒழுங்கைக் காக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என்ற அடிப்படையிலே தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தலைவிக்காக அப்பாவி மாணவிகளை உயிரோடு எரித்த குற்றவாளிகளை முன்னாள் அமைச்சர் சென்று சந்தித்தது போல்தான் இதுவு்ம் என்று எடுத்துக் கொள்ளலாம். எனினும் அரசு ஊர்தியைப் பயன்படுத்தியதைத் தவிர்த்திருக்க வேண்டும். )

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 4:12:00 PM
10/27/2010 4:12:00 PM


By Thurumapuri bus burning convicts
10/27/2010 4:10:00 PM
10/27/2010 4:10:00 PM


By KASAMALM KARUNANIDHI
10/27/2010 3:55:00 PM
10/27/2010 3:55:00 PM


By ராவணன்
10/27/2010 3:50:00 PM
10/27/2010 3:50:00 PM


By Kannappan
10/27/2010 3:46:00 PM
10/27/2010 3:46:00 PM


By Appan
10/27/2010 3:07:00 PM
10/27/2010 3:07:00 PM


By raja
10/27/2010 2:41:00 PM
10/27/2010 2:41:00 PM


By manoharan
10/27/2010 2:37:00 PM
10/27/2010 2:37:00 PM


By தகரபாலு
10/27/2010 1:33:00 PM
10/27/2010 1:33:00 PM


By Siva
10/27/2010 1:22:00 PM
10/27/2010 1:22:00 PM


By pugazhendhi s
10/27/2010 1:09:00 PM
10/27/2010 1:09:00 PM


By K Rajan
10/27/2010 12:50:00 PM
10/27/2010 12:50:00 PM


By Whistle blower of Pallavaram Municipality
10/27/2010 12:15:00 PM
10/27/2010 12:15:00 PM


By Sundar
10/27/2010 12:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English10/27/2010 12:14:00 PM