ஞாயிறு, 24 அக்டோபர், 2010

அருணாசலப் பிரதேசம் குறித்து இணையதளத்தில் சீனா விஷமம்

பீஜிங், அக்.23- இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலம் தனது நாட்டுக்கு சொந்தமானது போன்று இணையதளத்தில் உலக வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது."கூகுள் எர்த்" இணையதளத்துக்குப் போட்டியாக சீன மொழியில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் இவ்வாறு விஷமமான முறையில் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு திபெத் என்று சீனா வாதிட்டு வரும் பகுதியில் அருணாசலப் பிரதேசம் இணைந்திருப்பது போல் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்கு உட்பட்ட அக்சய் சின் பகுதியும் சீனாவுக்கு சொந்தமானது போன்ற தோற்றத்தில் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துடன் இந்தியாவின் அக்சய் சின் பகுதி இணைந்திருப்பது போன்று வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.சீனாவுடனான உறவில் சிக்கல் உருவாகும் என்ற கருத்தின் அடிப்படையில், தலாய் லாமாவுக்கு தில்லியில் உள்ள மத்திய அரசின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதை இந்திய வெளியவுறவு அமைச்சகம் தடுத்து வைத்துள்ள நிலையில், சீனா வேண்டுமென்றே இணையதளத்தில் இவ்வாறு விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

இராமர் பூமி வழக்கில் தொடர்ந்து ஒருவர் உரிமை கோரியதால் அவருக்கும் ஒரு பங்கு என்று தீர்ப்பு வழங்கியதன்அடிப்படையில் நாளை தொடர்ந்து கோரும் சீனாவிற்கும் அருணாச்சலத்தில் ஒரு பங்கு உண்டு என எந்த நீதிபதியேனும் சொல்லக்கூடும். எனவே, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அடிக்கடி இவ்வாறு சீனா வரைபடத்தில் குறும்பு செய்வதும் இந்தியா அறிக்கையுடன் விட்டு விடுவதுமாக உள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை காங்.கிற்குக் கிடையாது. எனவே, இந்திய ஒருமைப்பாட்டைக் கருதி காங்.ஐ 
ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். சீனாவிற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:40:00 AM
I no more feel sad about such things after my people were butchered by india in Eezham.
By Truth
10/24/2010 1:57:00 AM
எங்க போனாங்க நம்ம வெளியுறவுச்செயலாளர், அமைச்சரெல்லாம்? அட ஒரு அறிக்கையை விடுங்கப்பா. அது போதும். நம்ம காங்கிரஸ் ஆட்சியில அதுமட்டும்தான் கிடைக்கும்.
By sboopa
10/23/2010 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக