வியாழன், 28 அக்டோபர், 2010

கோவில்பட்டி மாணவர் கண்டுபிடித்த "ரோபோ'

கோவில்பட்டி, அக். 27:    வீட்டு வேலைகளை செய்வதற்குதான் "ரோபோ' பயன்படும் என  அறிந்திருக்கிறோம். இப்போது, ராணுவத்தில் பாதுகாப்பு இயந்திர மனிதனாக  செயல்படும் ரோபோவை உருவாக்கியுள்ளார் கோவில்பட்டி மாணவர் கி.ராஜ்குமார். கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த ராஜ்குமார், சிவகாசி அருகேயுள்ள செவல்பட்டி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை  இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த ரோபோவின் செயல்பாடுகள் குறித்து கோவில்பட்டி கஸ்தூரிபாய் மழலையர்  மற்றும் துவக்கப் பள்ளியில் ராஜ்குமார் புதன்கிழமை விளக்கம் அளித்தார். அவர்  கூறியதாவது: "பாதுகாப்பு இயந்திர மனிதன் 2010' என்ற இந்த ரோபோவை ராணுவத்தில் பயன்படுத்தலாம். தட்ப வெட்ப நிலைகள் மாறும் இடங்களிலும், மலைப்  பிரதேசங்களிலும், பாலைவனங்களிலும் சோலார் தகட்டின் மூலமாக இந்த ரோபோ  இயங்கும். வயர்லெஸ் மூலமாக இதை இயக்கலாம். இதிலுள்ள கேமராவானது அனைத்து  திசைகளிலும் சுழலக்கூடியது. மேலும், தொலைவில் இருந்தாலும் தெளிவான காட்சிகளைக் காட்டும். இமேஜ் பிராசஸ் டெக்னாலஜி மூலம் மேலை நாடுகளில் இந்த தொழில்நுட்பம்  ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது. நம்நாட்டில் இந்த தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி இயந்திரம் உருவாக்கப்பட்டால், அந்நிய சக்திகளின் ஊடுருவலை  முழுவதுமாகத் தடுக்க இயலும். விஃபி (ரஐஊஐ) இணைப்பு மூலமாகவும், செயற்கைக்கோள் மூலமாகவும் இதை  இயக்கலாம். மாற்றுத் திறனாளிகள் இதை செக்யூரிட்டி சிஸ்டமாகவும் பயன்படுத்தலாம். மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி செய்தால், "பாதுகாப்பு இயந்திர மனிதன் 2010' என்ற இந்த ரோபோவை இன்னும் சிறந்த முறையில் தயாரித்து பயன்பாட்டுக்கு  கொண்டு வருவேன் என்றார் அவர். ராஜ்குமாரின் தந்தை கிருஷ்ணசாமி. இவர் வியாபாரம் செய்து வருகிறார். தாய்  சீத்தாம்மாள், கோவில்பட்டி தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வருவாய்  மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கணேஷ்குமார் (15) என்ற  சகோதரர் உள்ளார்.பாராட்டு:  ரோபோவை கண்டுபிடித்த மாணவர் ராஜ்குமாருக்கு பள்ளியில் பாராட்டு  விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி கிருஷ்ணசாமி  தலைமை வகித்தார். பிரில்லியன்ட் சோஸியல் வெல்ஃபேர் சேரிடபிள் டிரஸ்ட் செயலர் மனோகரன்,  தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி சங்கச் செயலர் கமலக்கண்ணன்,  பாலாஜி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளித் தாளாளர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி வட்ட வழங்கல் அதிகாரி முருகானந்தம், தொழிலதிபர் ஜேக்கப் ராஜாமணி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக