ஞாயிறு, 24 அக்டோபர், 2010

சாகித்ய அகாதெமி கிளை தமிழகத்தில் அமைவது மாநில அரசின் கையில் உள்ளது


புதுக்கோட்டை, அக். 23:  மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமான சாகித்ய அகாதெமிக்கு பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கிளை அமைவது மாநில அரசின் கையிலேயே உள்ளது என்றார் அந்த அமைப்பின் தென் மண்டலச் செயலர் பெங்களூர் ஜா. பொன்னுத்துரை.  புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:  ""சாகித்ய அகாதெமி சார்பில் கவிஞர்கள் சங்கம நிகழ்ச்சி தென் மாநில மொழிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே தேனி, மதுரை, நாகர்கோவில், திருச்சியில் நடைபெற்ற நிலையில் தற்போது புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. பல்வேறு படைப்பாளிகள் பங்கேற்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் புதிய போக்குகளை உருவாக்கும் களங்களாகத் திகழ்கின்றன.  சாகித்ய அகாதெமி கடந்த 1954-ல் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. நாட்டின் உயரிய இலக்கிய அமைப்பு இன்றளவும் இதுதான். தமிழகத்தைத் தவிர நாடு முழுவதும் அதற்கு மாநிலக் கிளை அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் அமைக்கப்படாததன் காரணம் தெரியவில்லை.  இந்த விஷயத்தில் பொதுவாக மாநில அரசுதான் மத்திய அமைப்புக்கு தனது விருப்பத்தைத் தெரிவிப்பது சம்பிரதாயம். ஆகையால், தமிழகத்தில் கிளை அமைய மாநில அரசிடம் இது தொடர்பாக நாங்கள் வலியுறுத்துவோம். தமிழகத்தில் சாகித்ய அகாதெமியின் மாநில மையம் அமைவது தமிழக அரசின் கையில்தான் உள்ளது'' என்றார் பொன்னுத்துரை.  பேட்டியின்போது, கவிஞர்கள் மு. மேத்தா, தங்கம் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

இதன் விற்பனைக் கிளை மையம் சென்னையில் உள்ளது. மாநிலக் கிளை வேறு என்ன பணி யாற்றும்? அதனை விளக்கித் தென்மண்டலச் செயலரே உரிய நடவடிக்கையை எடுத்தால் தமிழ்நாடும் ஒத்துழைத்து விரைவில் அதன் கிளை அமையும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக