சென்னை, அக்.24- காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருமாவளவன் அத்துமீறிய அரசியல் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கே அறிவுரை வழங்கியுள்ளார். 70 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் அறிவுரை கூறியிருப்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாகும்.தமிழக காங்கிரஸ் யார் தோளிலாவது சவாரி செய்யும் கட்சி என்று அவர் கூறியுள்ளார். வெற்றி தோல்விகளை கண்டு காங்கிரஸ் துவண்டு போனதில்லை. காங்கிரஸ் கட்சி இன்றுவரை தொய்வில்லாமல் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறது.தலைவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அரவணைக்கப்பட்ட திருமாவளவன் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், கூட்டணி தர்மத்துக்கு விரோதமாகவும் பேசுவது நல்ல பண்பு அல்ல. இத்தகைய நடவடிக்கையை அவர் இனி நிறுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கே.வீ. தங்கபாலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:11:00 AM
10/25/2010 3:11:00 AM


By "Kalangum Ullam"
10/25/2010 2:16:00 AM
10/25/2010 2:16:00 AM


By "Kumurum Ullam"
10/25/2010 12:26:00 AM
10/25/2010 12:26:00 AM


By Emmen
10/24/2010 9:16:00 PM
10/24/2010 9:16:00 PM


By Aadhavan
10/24/2010 8:22:00 PM
10/24/2010 8:22:00 PM


By prs venkatesan
10/24/2010 8:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/24/2010 8:07:00 PM