கோலாலம்பூர், அக்.27- மலேசியாவில் வாழும் பூர்வீக இந்தியர்கள் தொடர்பான பிரச்னையை அந்த நாடு தனியாகவே கையாளும் என்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.புத்ராஜயா நகரில் மன்மோகன் சிங்கும் அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரஸாக்கும் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.பூர்வீக இந்தியர்களின் பிரச்னை முழுக்க முழுக்க மலேசியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும், அதை இந்தியா மதிக்க வேண்டும் என்றும் நஜீப் கூறினார்."இந்தியாவைப் போலவே மலேசியாவும் பல கலாசாரங்களை கொண்ட நாடாகும். குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடாகும். பூர்வீக இந்தியர்கள் பிரச்னை போன்ற விவகாரங்களை தனியாகவே எதிர்கொள்ளும் திறன் மலேசியாவுக்கு உண்டு." என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 4:34:00 PM
10/27/2010 4:34:00 PM


By WILLIAMS R
10/27/2010 4:32:00 PM
10/27/2010 4:32:00 PM


By Nagore Babu
10/27/2010 4:08:00 PM
10/27/2010 4:08:00 PM


By Karthik
10/27/2010 3:41:00 PM
10/27/2010 3:41:00 PM


By muthu
10/27/2010 3:31:00 PM
10/27/2010 3:31:00 PM


By desai
10/27/2010 3:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English10/27/2010 3:27:00 PM