ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா?
First Published : 24 Oct 2010 01:26:52 AM IST
Last Updated : 24 Oct 2010 01:17:39 PM IST

ஒச்சாயி படத்தில் ஒரு காட்சி.
சென்னை,அக்:23: தமிழகத்தில் சமீபத்தில் திரையிடப்பட்டுள்ள ஒச்சாயி திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயர் இல்லை எனவும், அப்படி தமிழ்ப் பெயராக இருந்தால் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் கோரப்பட்டிருப்பதற்கு மதுரைப் பகுதியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. புதுமுகங்கள் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் "ஒச்சாயி' படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ் அகராதியில் "ஒச்சாயி' என்ற பெயருக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்று வரி விலக்கு ஆணையம் விளக்கம் அளித்து வரிவிலக்கை மறுத்துள்ளது. புதுமுக இயக்குநர் ஆசைத்தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஆச்சிக் கிழவி திரைக்கூடம் நிறுவனம் சார்பில் திரவியபாண்டியன் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் தயா, தாமரை நடித்துள்ளனர். மதுரை மாவட்ட கிராமத்து இளம் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து "ஒச்சாயி' உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. உசிலம்பட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி தனது முதல் இயக்கத்தில் உருவான படத்துக்கு குலதெய்வத்தின் பெயரில் ஒச்சாயி எனப் பெயர்சூட்டியுள்ளதாகத் தெரிவிக்கிறார். ஆனால், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் மட்டும் ஒச்சாயி தமிழ்ப் பெயர் என்பதை தமிழ் அகராதி மூலம் நிரூபிக்கவேண்டும் என கூறுவதாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளி வந்த படத்துக்கு "சிவாஜி' என்று பெயரிடப்பட்டிருந்தது. "சிவாஜி' தமிழ்ப் பெயரே கிடையாது. ஆனால் "சிவாஜி' படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எந்திரன், "வ' குவார்ட்டர் கட்டிங் போன்ற திரைப்படங்கள் வரி விலக்குக்காக பரிசீலக்கப்படும்போது ஒச்சாயி போன்ற தமிழ் கிராம தேவதைகளின் பெயரால் எடுக்கப்படும் திரைப்படங்களைப் புறக்கணிப்பதை எதிர்த்து கண்டனம் எழுந்துள்ளது. "அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் உருவாக்கும் படங்கள்; பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் என அனைத்துக்கும் கேள்வி கேட்காமல் வரி விலக்கு தரப்படுகிறது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் தலைப்பு தமிழில் இருந்தாலும் அவற்றிக்கு வரி விலக்கு அளிப்பதில் பல கேள்விகள் கேட்டு வரி விலக்கு அளிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்' என்கிறார்கள் சிறிய திரைப்படத் தயாரிப்பாளர்கள். இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பியிடம் கேட்டபோது, உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல; இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:37:00 AM
10/25/2010 3:37:00 AM

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:29:00 AM
10/25/2010 3:29:00 AM


By மதுரைக்காரன்
10/25/2010 12:18:00 AM
10/25/2010 12:18:00 AM


By Niamathullah - Dubai.
10/24/2010 5:45:00 PM
10/24/2010 5:45:00 PM


By S. Arunagiri
10/24/2010 12:04:00 PM
10/24/2010 12:04:00 PM


By kamalhashan
10/24/2010 11:55:00 AM
10/24/2010 11:55:00 AM


By தமிழன்
10/24/2010 11:48:00 AM
10/24/2010 11:48:00 AM


By உதயநிதி ரசிகர் மன்றம்
10/24/2010 9:36:00 AM
10/24/2010 9:36:00 AM


By vasantha.m.s.
10/24/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/24/2010 2:42:00 AM