புதன், 27 அக்டோபர், 2010

தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்தின் பெயர் மாற்றம்; அரசாணை வெளியீடு


தஞ்சாவூர், அக். 26: மதுரையில் தொடங்கப்பட்டுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் என்ற பெயரை உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன்.   இதுகுறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியது:   கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு. கருணாநிதி தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில், மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் வரையறை செய்யப்பட்டு, சங்கத்தால் மேற்கொள்ளப்படவுள்ள தமிழ் வளர்ச்சிப் பணிக்காக  100 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது.    தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழி சங்கம் என்பதை உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்து, அப் பேரவைக்கான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்து ஆணை வெளியிடுமாறு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரனிடமிருந்து தமிழக அரசுக்கு அக். 8,17 மற்றும் 19 ஆகியத் தேதிகளில் கருத்துருகள் அனுப்பப்பட்டன.   இதற்கிடையே தமிழக அரசு இந்த சங்கத்தின் பெயரை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:   இதுகுறித்து ஏற்கெனவே வெளியிட்டப்பட்ட அரசாணையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் என வரும் இடங்களில் இனி உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை என்று படிக்க வேண்டும்.    பேரவை: 14 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையின் தலைவராக முதல்வர். மு. கருணாநிதியும், கெüரவச் செயலளராக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரனும் செயல்படுவர்.   உறுப்பினர்கள்: தமிழக தமிழறிஞர்கள் முனைவர்கள் பொன் கோதண்டராமன் (பொற்கோ), ராம. பெரிய கருப்பன் (தமிழண்ணல்), பிற மாநிலத் தமிழறிஞர்கள் முனைவர்கள் கி. நாச்சிமுத்து (தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்), குளோரியா சுந்தரமதி (திருவனந்தபுரம்).    தமிழாய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளி முனைவர் ழான்-லா செவிலார்டு, வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் முனைவர்கள் ஜார்ஜ் ஹார்ட் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனி), திராவிடவியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் தமிழரல்லாத வெளிநாட்டினர் முனைவர் அஸ்கோ பர்ப்போலா (பின்லாந்து), இந்தியத் தமிழ்ச் சங்கத்தினர் தமிழறிஞர் புலவர் பி. விருத்தாசலம் (கரந்தைத் தமிழ்ச் சங்கம்), வெளிநாட்டுத் தமிழ்ச் சங்க அமைப்பினர் முனைவர் தசரதன் (பாரிஸ் தமிழ்ச் சங்கத் தலைவர்).    பேரவை இயக்குநராக (இதற்கென அன்றாடப் பணிகளைக் கவனிக்கும் நிர்வாகக் குழுச் செயலர் தாற்காலிகம்) தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைப் பேராசிரியர் முனைவர் மு. ராமசாமி, சிறப்பு உறுப்பினர்கள் தமிழ் வளர்ச்சி இயக்ககம் இயக்குநர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன்.    நிர்வாகக் குழு:   தலைவர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன், தாற்காலிக பேரவை இயக்குநர் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, பேரவை உறுப்பினர்கள் இருவர் முனைவர் பொன் கோதண்டராமன் (பொற்கோ), தமிழ்நாடு அரசுச் செயலர் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் தமிழியற்புல ஒருங்கிணைப்பாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் ஈசுவரப் பிள்ளை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் நிறுவன இயக்குநர்.   உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை அலுவலகம் தாற்காலிகமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும். இதற்கான நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள அறிவுறுதப்படுகிறது. மேலும், உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவையின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள, பேரவையின் பணியிடங்களை நிரப்ப, தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.    மதுரை தல்லாக்குளம் பகுதியில் உலகத் தமிழ்ச் சங்கத்துக்கென வழங்கி ஆணையிடப்பட்டுள்ள 14.15 ஏக்கர் நிலத்தை உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவைக்கு நில உரிமை மாற்றம் செய்ய செயல்குறிப்பினை அனுப்புவதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.    பேரவையின் பணிகள் தாற்காலிகமாக செயல்படுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை பாலாற்று இல்லத்தின் அலுவலக அறையை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் பணியை மேற்கொண்டு வரும் மு. மாரியப்பன், லட்சுமணன் ஆகியோர் தொகுப்பூதியத்திலும், நாளூதியத்திலும் சென்னை பாலாறு இல்ல அலுவலகத்தில் 2011 மார்ச் மாதம் வரை பணியமர்த்துவது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பேரவையின் கெüரவச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார் துணைவேந்தர்  ராசேந்திரன்
கருத்துக்கள்

பதிவு செய்கையில் அந்தப் பக்கத்திலேயே உள்ளது. பார்த்தால் பதிவாகி உள்ளது. என்ன பிழை என்று தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 5:13:00 PM
அமைப்பையும் பொறுப்பாளர்களையும் பாராட்டி விட்டு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்துக் கருத்துகள் தெரிவித்தால் தினமணி அவற்றை நீக்கி விடும். எனவே, அந்தச் சுமையைத் தினமணிக்குக் கொடுக்க வேண்டா என ஒன்றும் எழுதவில்லை. தொல்காப்பியர் வழி நின்று தொல்தமிழ் வளர்ப்போம்! பரப்புவோம்! காப்போம்! மக்கள் திலகம் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 5:10:00 PM
அமைப்பையும் பொறுப்பாளர்களையும் பாராட்டி விட்டு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்துக் கருத்துகள் தெரிவித்தால் தினமணி அவற்றை நீக்கி விடும். எனவே, அந்தச் சுமையைத் தினமணிக்குக் கொடுக்க வேண்டா என ஒன்றும் எழுதவில்லை. தொல்காப்பியர் வழி நின்று தொல்தமிழ் வளர்ப்போம்! பரப்புவோம்! காப்போம்! மக்கள் திலகம் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 5:09:00 PM
அமைப்பையும் பொறுப்பாளர்களையும் பாராட்டி விட்டு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்துக் கருத்துகள் தெரிவித்தால் தினமணி அவற்றை நீக்கி விடும். எனவே, அந்தச் சுமையைத் தினமணிக்குக் கொடுக்க வேண்டா என ஒன்றும் எழுதவில்லை. தொல்காப்பியர் வழி நின்று தொல்தமிழ் வளர்ப்போம்! பரப்புவோம்! காப்போம்! மக்கள் திலகம் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக