Last Updated :
வாஷிங்டன்: ஹாலிவுட் திரைப்படமான "ஸ்டார் வார்ஸ்: எ நியூ ஹோப்'பில் இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்கள் இருப்பதாக கற்பனையாக கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அது உண்மையாகி விட்டது. இரண்டு சூரியன்கள் உள்ள கிரகங்களை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக பெரும்பாலான கிரகங்களுக்கு பூமிக்கு இருப்பதைப் போல ஒரு சூரியன் மட்டுமே இருக்கும்.இது குறித்து விண்வெளி ஆய்வாளர் மேத்யூ கூறுகையில், இரண்டு சூரியன்கள் உள்ள 12-க்கும் மேற்பட்ட கிரகங்களை கண்டறிந்துள்ளோம். இவை பூமியில் இருந்து 49 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன. முழுவதும் வாயுவால் நிரம்பியுள்ள இக்கிரகங்கள் சூரியனைவிடப் பெரியவை என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக