மதுரை, அக்.23: லிபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்று சம்பளம் மற்றும் உணவு இல்லாமல் தவித்த தமிழர்கள், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால் மீட்கப்பட்டனர். இது குறித்து மதுரையில் மத்திய அமைச்சரின் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்காக 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன் லிபியா சென்றனர். அங்குள்ள நிறுவனம் தமிழகத் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் உணவு சரிவர வழங்காமல் இருந்துள்ளன. இதுகுறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடர்புகொண்டு தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். துரிதமாக செயல்பட்ட இந்திய தூதரகம், முதற்கட்டமாக 40 தமிழர்களை மீட்டது. மீட்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் விரைவில் இந்தியா வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

விடவேண்டும். இதற்கான கோரிக்கை வைத்து அவர் வெற்றி பெற வேண்டும்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/24/2010 2:45:00 AM
மறு பதிவு: நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். இதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதில் இருந்தும் அயல்நாடுகளில் தடுத்து வைக்கப்படுவதில் இருந்தும் மீட்க வேண்டும். அயல்வாழ் தமிழர் நலன் என ஒரு துறையை உருவாக்கி அழகிரியின் பொறுப்பில் விடவேண்டும். இதற்கான கோரிக்கை வைத்து அவர் வெற்றி பெற வேண்டும். By Ilakkuvanar Thiruvalluvan 10/24/2010 2:45:00 AM எஞ்சிய தமிழர்களையும் உடனே மீட்க வேண்டும். அயல்வாழ் அமைச்சுத்துறை குறித்து வீரமணியார் பேசிய பேச்சு வேறு பக்கத்தில் வந்துள்ளது. அவ்வாறிருக்க இச்செய்தியை நீக்கியது முறைதானா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:20:00 PM
10/24/2010 3:20:00 PM


By hussain
10/24/2010 2:02:00 PM
10/24/2010 2:02:00 PM