வியாழன், 28 அக்டோபர், 2010

மலேசியாவுடன் ராணுவ ஒப்பந்தம்: மன்​மோ​கன் முன்​னி​லை​யில் கையெ​ழுத்து

கோலாலம்பூர், அக்.27: மலேசியாவுடன் ராணுவம், பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.  ÷பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். அப்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பரந்துபட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.  ÷இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு மற்றும் பல்வேறு துறைகளில் கூட்டாக செயல்படுவது குறித்து மலேசிய பிரதமர் முகமது நஜீப் துன் அப்துல் ரஸôக்குடன் பிரதமர் மன்மோகன் சிங் விரிவான பேச்சு நடத்தினார். இதன் முடிவில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.  அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், ராணுவம், பயங்கரவாத தடுப்பு, பெட்ரோல் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களைக் கண்டறிதல் உள்ளிட்ட 6 துறைகளில் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.  வர்த்தக ஒப்பந்தம்: இரு நாடுகளும் இணைந்து ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇசிஏ) ஒன்றை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளிடையிலான சரக்கு போக்குவரத்தில் தடையற்ற நிலையை உருவாக்குவது, சேவை மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது ஆகியனவும் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை 1-ம் தேதி கையெழுத்தானது. அப்போது மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இதில் கையெழுத்திட்டார்.  ÷ஆசியான்-இந்தியா ஒப்பந்தத்தைக் காட்டிலும் சிஇசிஏ ஒப்பந்தம் பரந்து பட்டதாகும். இரு நாடுகளிடையிலான சரக்கு போக்குவரத்து, நிறுவனங்களின் சேவை உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இது தவிர, வரிச் சலுகை ஓராண்டுக்குப் பிறகு அளிக்கப்படும் என்ற நிலை இப்போது மாற்றப்பட்டு 6 மாதத்துக்கு முன்னதாக அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.  மலேசிய நிறுவனங்களுக்கு மன்மோகன் அழைப்பு: மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அன்னிய நேரடி முதலீட்டு விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.  ÷மலேசியாவிலிருந்து வெளியாகும் "நியூ ஸ்டிரெய்ட்' செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:  ÷அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது. இதன் மூலமே விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்பதால் இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  எனவே கட்டமைப்பு வசதிகள் சார்ந்த துறைகளில் மலேசிய நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். நீண்ட கால அடிப்படையிலான இத்துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் உறுதியான பலன்களை நிச்சயம் பெறலாம். அத்துடன் இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் மலேசிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற முடியும்.  ÷அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விதிமுறைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் மன்மோகன் சிங்.  2010-ம் ஆண்டு இந்திய-மலேசிய உறவில் மிகவும் முக்கியமானதாகும். இரு நாடுகளும் பரஸ்பரம் புரிந்து கொண்டு செயல்படுவதற்கு வலுவான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் மேலும் கூறினார்.  ÷இரு நாடுகளின் தலைமை செயல் அதிகாரிகள் கொண்ட அமைப்பை உருவாக்க முடிவு செய்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தகம், தொழில்துறை சார்ந்த பிரச்னைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.  ÷இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 2015-ம் ஆண்டில் 1,500 கோடி டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இப்போது இரு நாடுகளிடையிலான வர்த்தக அளவு 750 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.  ÷நிர்ணயிக்கப்பட்ட வர்த்தக இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்று மலேசிய பிரதமர் ரஸôக் நம்பிக்கை தெரிவித்தார்.  
கருத்துக்கள்

அடடா! ஈழததமிழர்களைப் போல் மலேசியத் தமிழர்களையும் ஒரு வழி பார்த்து விடுகிறேன் எனச் சொல்லி படைத்துறையிலும் ஒப்பந்தம் போட்டு வந்துள்ளாரா எனத் தெரியவில்லையே! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக