வேலூரில், பெரியார் பூங்காவைத் திறந்து வைத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் சிறுவர், சிறுமியர். உடன் (இடமிருந்து) மு
வேலூர், அக். 27: கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் திமுகவினருக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார். வேலூர் கோட்டையின் தெற்குப்புறத்தில், சுற்றுலா நிதி ரூ. 83 லட்சத்தில் 15 ஏக்கர் பரப்பில் பெரியார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 கிலோ மீட்டர் சுற்று கொண்ட நடைபாதை, புல்வெளிகள், மின் விளக்குகள், வண்ண நீரூற்றுகள், ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டு, அதில் காற்றடைத்த பலூனில் குழந்தைகள் நடக்கும் வண்ணம் வாட்டர் பால் விளையாட்டு, குழந்தைகள் தானே இயக்கும் வகையில் பேட்டரியினாலான சிறிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கேட்டிங், வில் அம்பு விளையாட்டு, துப்பாக்கி சுடுதல், பல்வேறு வகையான ஊஞ்சல்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை புதன்கிழமை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்: "கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் திமுகவினர் மட்டுமே பயன்பெறுகின்றனர் என்பது தவறான குற்றச்சாட்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பின்றி இவ்வாறு கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டை உரிய ஆதாரங்களோடு அவர் நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். இத்திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் பொறுக்க முடியாமல் ஜெயலலிதா இவ்வாறு கூறுகிறார்' என்றார் மு.க.ஸ்டாலின். இவ்விழாவில், அமைச்சர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்
தி.மு.க. நடத்தும் கூட்டத்தில் வரும் முதன்மைப் புகார்கள் பொறுப்பாளர்கள நலத்திட்ட உதவிகைளத் தி.மு.க.வினருக்குத் தராமல் எதிர்க்கட்சியினருக்கு அளிக்கின்றனர் என்பதுதான். அப்பொழுதே நலத்திட்ட உதவி கட்சி சார்பற்ற் அனைவருக்கும் உரியது. இவ்வாறு முறையீடு சொல்வதை நிறுத்துமாறு சொல்ல வேண்டும். எனினும் அத்தகைய முறையீடுகள் மூலம் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு சரியில்லை என்பது புரிகின்றது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/28/2010 3:21:00 AM