டர்பன், அக். 25: மும்பையைச் சேர்ந்த ரேகா காசிநாத் சமந்த் என்ற செவிலியருக்கு குறைப் பிரசவ குழந்தைகளை பராமரிப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பதில் சர்வதேச விருது பெறும் முதல் இந்தியப் பெண் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. ரேகா மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் செவிலியர்களுக்கான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரேகாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கானா நாட்டைச் சேர்ந்த ரெஜினா ஒபெங் என்பவருக்கும் குறை மாதக் குழந்தைகள் பராமரிப்புக்கான சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டது.
கருத்துக்கள்
விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல் உங்கள் தொண்டு தொடரட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 3:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/27/2010 3:27:00 AM