திண்டுக்கல், அக். 22: மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்குவதன் மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார். தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுவரும் இளைஞர் காங்கிரஸ் குழு, வியாழக்கிழமை இரவு திண்டுக்கல் நகருக்கு வந்தது. அப்போது யுவராஜா கூறியதாவது: கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரைக் குழு பிரசாரம் மேற்கொள்கிறது. 1,250 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளோம். மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறுவதே எங்கள் நோக்கம். இதன்மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவதில்லை. கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் கடமை காங்கிரசுக்கு உண்டு. ஆட்சி முடிந்த பின்னரும், தங்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார் அவர். முன்னதாக, குள்ளனம்பட்டிக்கு வந்த யாத்திரைக் குழுவினரை காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:30:00 AM
10/24/2010 2:30:00 AM


By நாடோடி
10/23/2010 9:25:00 PM
10/23/2010 9:25:00 PM


By INDRAJIT, KANGEAYAM
10/23/2010 12:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/23/2010 12:36:00 PM