செவ்வாய், 9 அக்டோபர், 2012

தமிழகத்துக்கு த் திறக்கப்பட்ட கி.இரா.சா.(கே.ஆர்.எசு.) அணை தண்ணீர் நிறுத்தம் - water released from k.r.s.dam stopped

தமிழகத்துக்கு த் திறக்கப்பட்ட  கி.இரா.சா.(கே.ஆர்.எசு.) அணை தண்ணீர் நிறுத்தம்
 
பெங்களூரு : கர்நாடகா, கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் நேற்றிரவு நிறுத்தப்பட்டது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, கர்நாடகா அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனு மீதான விசாரணை, அக்டோபர், 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடகா அரசு சார்பில், மூத்த வக்கீல் நாரிமன், பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழகத்திற்கு தண்ணீர் விடுவது இன்றிரவிலிருந்து (நேற்று) நிறுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த, பிரமாண பத்திரத்திற்கு, தமிழக அரசு இரண்டு நாளில் பதிலளிக்குமாறு நீதிபதி ஜெயின் உத்தரவிட்டார்.

"தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது' என, கர்நாடகாவில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கர்நாடகாவில் இயங்கி வரும் மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் மைசூரு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு, 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், நேற்று மாலை, 9,800 கன அடி தண்ணீராக குறைக்கப்பட்டது. தமிழகத்துக்கு விடப்பட்டு வந்த தண்ணீரை, கர்நாடகா எந்த நேரத்திலும் நிறுத்தலாம் என்ற நிலை உருவானது.

நேற்றிரவு, 7:45 மணியளவில், தமிழகத்துக்கு விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. கர்நாடகா விவசாயத்திற்கு மட்டும், 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவின் அனைத்து எம்.பி., க்களுடன் டில்லியில், இன்று காலை, 9:30 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக