காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி. இராசேந்தர் ஆர்ப்பாட்டம்
சென்னை, அக் 12-
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். கலெக்டர் அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. லட்சிய தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
டி.ராஜேந்தர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்காதே, சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே, காவிரியில் தண்ணீர் விட மறுக்காதே என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் டி.ராஜேந்தர் பேசும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுக்கிறது. தேசத்தில் இருக்கிறதா இல்லையா தேசிய ஒருமைப்பாடு. மத்திய அரசு எடுக்க வேண்டும் சரியான நிலைப்பாடு.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு எம்.எம்.ஆர். மதன் தலைமை தாங்கினார். டி.வாசு, ஆர். ராஜி, எஸ்.தாமு, டி.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக