அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு
First Published : 11 October 2012 04:43 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அக்டோபர் மாதம் முழுவதும்
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக்
குழு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் மாதம் இறுதி வரை 8.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்து, கர்நாடக செயலர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இன்று புது தில்லியில் நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழக, புதுச்சேரி, கர்நாடக மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது.
அக்டோபர் மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவையும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையும் நிராகரித்துள்ளது கர்நாடக அரசு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக