செவ்வாய், 9 அக்டோபர், 2012

கருநாடக அரசு மீது அவமதிப்பு வழக்கு

கருநாடக அரசு மீது அவமதிப்பு வழக்கு: 

தமிழக அரசு முடிவு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழக அரசுக்கு உரிய நீரைத் திறந்து விட மறுத்துள்ள கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு விடுவித்துக் கொண்டிருந்த தண்ணீரை தன்னிச்சையாக நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய பங்கினை உடனடியாக பெற முதலமைச்சர் உத்தரவிட்டார்.  முதலமைச்சரின் உத்தரவினையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புது தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தினமும் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ளாத கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட மறுப்புத் தெரிவித்தது.இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பிரதமரின் உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டது.
இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடக அரசு சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், பிரதமர் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
நேற்று மாலை, பிரதமர் கோரிக்கையை நிராகரித்த ஒரு சில மணி நேரங்களிலேயே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது கர்நாடக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காவிரியில் தண்ணீர் நிறுத்தம்: கருநாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர செயலலிதா உத்தரவு
காவிரியில் தண்ணீர் நிறுத்தம்: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.9

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவேரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெற்றே தீர வேண்டும் என்ற முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியான நடவடிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக, காவேரி நதிநீர் ஆணைய உத்தரவின்படி 20.9.2012 முதல் 15.10.2012 வரை நாளென்றுக்கு 9,000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் 28.9.2012 அன்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து, 29.9.2012 முதல் தண்ணீரை விடுவிக்கத் துவங்கிய கர்நாடகம், நேற்று (8.10.2012) இரவு முதல் தமிழகத்திற்குரிய தண்ணீரை விடுவிப்பதை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு விடுவித்துக் கொண்டிருந்த தண்ணீரை தன்னிச்சையாக நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய பங்கினை உடனடியாக பெற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் உத்தரவினையடுத்து, கர்நாடக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக