திருப்பத்தூர் அருகே மிதிகை (ஆட்டோ) கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: 10 மாணவர்கள் காயம்
மாலை மலர் Vellore வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 11:43 AM IST
திருப்பத்தூர், அக்.12-
திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொப்பளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு பெயிண்டர். இவரது மகள் சாஸ்திகா (வயது4). கஜ்ஜல்நாயக்கன் பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அவருடன் 10 மாணவ, மாணவிகளும் சென்றனர்.
கஜ்ஜல்நாயக்கன் பட்டி அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மாணவி சாஸ்திகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கஜ்ஜல்நாயக்கன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் மாணவி சாஸ்திகா பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் மேலும் காயமடைந்த 10 மாணவ, மாணவிகளும் கஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் கஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக