வெள்ளி, 12 அக்டோபர், 2012

மின்மாற்றிகளில் தானியங்கி அலகு கணணக்கி : வீடுகளிலும் பொருத்த மின்வாரியம் திட்டம் - automatic reading meter

மின்மாற்றிகளில் தானியங்கி அலகு  கணக்கி :வீடுகளிலும் பொருத்த மின்வாரியம் திட்டம்

ஈரோடு: ஈரோடு மண்டல மின்வாரிய டிரான்ஸ்பார்ம்களில், மின் இழப்பை (லைன் லாஸ்) கணக்கிட, தானியங்கி ரீடிங் மீட்டர் பொருத்தும் பணி துவங்கியது. தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில், 30 முதல், 40 சதவீதம் வினியோகத்தின் போது, லைன் லாசில் வீணாகிறது. இதை சரி செய்தால் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளில் மின்வாரியம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக லைன் லாசை துள்ளியமாக கணக்கிடும் வகையில், மாநிலம் முழுவதும், மின் வினியோகத்துக்கு பயன்படும், டிரான்ஸ்பார்மர்களில், "தானியங்கி ரீடிங் மீட்டர்' பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு, மீட்டர் கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, பொருத்தும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு மண்டலத்தில், ஈரோடு, சேலம், கோபி, மேட்டூர், நாமக்கல் ஆகிய மின் பகிர்மான வட்டங்கள் உள்ளன. ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 4,000க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்ம்கள் உள்ளன. இவற்றில், தேர்வு செய்யப்பட்ட, 878 டிரான்ஸ்ஃபார்ம்களில் அக்கருவி பொருத்தும் பணி நேற்று துவங்கியது.

டிரான்ஸ்பார்மின் ஒரு பகுதியில், மீட்டரை பொருத்திவிடுகின்றனர். டிரான்ஸ்பார்மரில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு மீட்டரில் பதிவாகும். இந்த ரீடிங் பதிவுகளை வழக்கம் போல, ஆட்கள் நேரில் சென்று குறிப்பெடுக்காமல், நேரடியாக மின்வாரிய அலுவலக கணினிக்கு வருவது போல, மீட்டரில், "சிப்' ஒன்றை பொருத்தி கட்டுப்படுத்தும் தானியங்கி அமைப்பையும் ஏற்படுத்துகின்றனர். டிரான்ஸ்பார்ம் ரீடிங்கையும், வீடுகளிலுள்ள மீட்டரில் வழக்கமாக எடுக்கும் ரீடிங் அளவையும், ஒப்பிட்டுப் பார்த்து, "லைன் லாஸ்' அளவை துள்ளியமாக தெரிந்துகொள்வர். அதன்பின், தொழில்நுட்ப ரீதியாக லாஸை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், முதற்கட்ட டிரான்ஸ்பார்ம்களில் ரிமோட் கன்ட்ரோல் ரீடிங் எடுக்கப்படுகிறது. ஈரோடு மட்டுமின்றி, இம்மண்டலத்திலுள்ள, பிற மின் பகிர்மான வட்டங்களிலும் டிரான்ஸ்பார்மர்களில், "தானியங்கி ரீடிங் மீட்டர்' பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், வீடுகளிலுள்ள மின்வாரிய மீட்டர்களிலும், "சிப்' பொருத்தி, தானியங்கி ரீடிங் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக டிரான்ஸ்பார்ம்களில், தானியங்கி ரிடிங் மீட்டர் பொருத்தி, "லைன் லாஸ்' கணக்கி பணி துவங்கியுள்ளது. இப்பணிகள் முழுமைப் பெற்று, தானியங்கி ரீடிங் முறை சிறப்பாக நடந்தால், வீடுகளிலுள்ள மீட்டர்களிலும், "சிப்' பொருத்தி, தானியங்கி ரீடிங் செய்யப்படும். இதற்கு, இன்னும் ஆறு மாதம் ஆகலாம். இதன்மூலம் நேரடியாக சென்று ரீடிங் எடுக்க வேண்டியதில்லை. ஊழியர் பற்றாக்குறை பிரச்னையும் இருக்காது. ஓரிரு ஆண்டுக்கு பின்பே அனைத்து வீடுகளிலுள்ள மீட்டர்களை தானியங்கி ரீடிங் வசதியை செய்யலாம் என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக