காவிரி நீர் நிறுத்தம்: தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு
First Published : 10 October 2012 02:38 PM IST
தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு உச்ச
நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி, தண்ணீரை நிறுத்திய கர்நாடகா மீது நீதிமன்ற
அவமதிப்பு வழக்கினை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு உரிய 9 ஆயிரம் டிஎம்சி நீரை கர்நாடக அரசு தினமும் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த 8ம் தேதி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தவறிய கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு இன்று கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக