திங்கள், 8 அக்டோபர், 2012

எதிர் போராட்டம் - ம.தி.மு.க. அறிவிப்பு

உதயகுமார் வீட்டை முற்றுகையிட க் காங்கிரசு முடிவு: எதிர் போராட்டம் நடத்தப் போவதாக ம.தி.மு.க. அறிவிப்பு
மாலை மலர்
உதயகுமார் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் முடிவு: எதிர் போராட்டம் நடத்தப் போவதாக ம.தி.மு.க. அறிவிப்பு
நாகர்கோவில், அக்.8-

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் வீடு நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ளது. பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கூடங்குளம் அணுமின்நிலையத்தை செயல்பட விடாமல் தடுத்து வரும் அவரது வீடு முன்பு நாளை (9-ந் தேதி) முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக குமரி மாவட்ட காங்கிரசார் அறிவித்துள்ளனர்.

காங்கிரசாரின் இந்த போராட்டத்துக்கு குமரி மாவட்ட ம.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் காங்கிரசுக்கு எதிராக போட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலைய பணி தொடங்கப்பட்டது முதல் அதை அனுமதிக்கக்கூடாது என்று தன்னை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் உதயகுமார். சுமார் 400 நாட்களாக இடிந்தகரை மக்களுக்கு அவர் தலைமை தாங்கி காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் மக்களை திசை திருப்பும் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீர், காற்று மூலமே தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை பெற முடியும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அணுமின் நிலையம் தேவை இல்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். டீசல், நிலக்கரி ஊழலை திசை திருப்ப காங்கிரசார் வருகிற 9-ந்தேதி உதயகுமார் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. அதற்கு எதிர் அரணாக செயல்படும். உதயகுமாரின் பள்ளி கட்டிடத்தை இடித்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. வருகிற 29-ந்தேதி சென்னை கோட்டை முன்பு ம.தி.மு.க. நடத்தும் மிகப் பெரிய போராட்டத்தில் குமரி மாவட்ட ம.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக