சொல்கிறார்கள்
"முயன்றால் 70 அகவையிலும சம்பாதிக்கலாம்!'
கடந்த, 40 ஆண்டுகளாக, புதுமையான முறைகளில் கொலு வைக்கும் கற்பகம்: நான் பிறந்து வளர்ந்தது, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில்; திருமணம் முடிந்து, காரைக்குடி வந்தபோது, எனக்கு தமிழ் தெரியாது. கணவர் வேலைக்கு சென்ற பின், வீட்டிற்குள்ளேயே இருப்பேன். அப்போது, கைவினைப் பொருட்கள் செய்யும் புத்தகம் பார்த்து, சிறிய பொருட்களை, பாசி கோர்த்து செய்யத் துவங்கினேன். சில ஆண்டுகளுக்குப் பின், அந்தப் பொருட்களை கொலுவாக வைத்தேன். அக்கம் பக்கத்தில் பாராட்டு கிடைக்க, உற்சாகத்துடன் நிறைய பொம்மைகள் செய்தேன்.கண்ணன் பிறந்ததில் துவங்கி, வெண்ணெய் திருடுவது, கோபியர்களுடன் விளையாடுவது என, பல கதைகளையும் பாசி பொம்மைகளில் செய்தேன். இதையெல்லாம் பார்த்து, குன்றக்குடி அடிகளார், எனக்கு விருது கொடுத்தார்.பாசிக்கு அடுத்ததாக, துணி பொம்மைகள் செய்வேன். அந்த பொம்மைகளை, ஆண்டு முழுவதுமே பார்வைக்கு வைப்பேன். ஆன்மிகவிஷயங்களையும், முயற்சி எடுத்து செய்வேன். ஒரு அப்பா, குட்டிப் பெண்ணை அழைத்துக் கொண்டு, தியேட்டருக்கு வர, அங்கு ஹவுஸ்புல். அழும் சிறுமியை சமாதானப்படுத்த, நடனம் ஆடும் அப்பா என, ஜாலியான கதைகளையும், கொலு பொம்மைகளாக வைத்திருக்கிறேன்.எத்தனையோ கொலு வைத்திருந்தாலும், கடந்த ஆண்டு, எங்கள், 80ம் திருமணத்தை கொலுவாக வைத்தது, மனதிற்கு நிறைவாக இருந்தது. என் மூன்று பிள்ளைகளும், வெளிநாட்டில் செட்டிலாகிவிட, இப்போது, இந்த பொம்மைகள் தான் எனக்கு குழந்தைகள். என், 60 வயதுக்கு பின் தான், ஓவியத்தின் மீது ஆசை வந்தது. நான் கற்றதோடு, நிறைய பேருக்கு சொல்லித் தருகிறேன்.கொட்டாங்கச்சியில் இருந்து, விபூதி மடல், சோளக்கதிர் தோலில் பொக்கே, சோடா பாட்டில்மூடியில் திராட்சைக் கொத்து என, இப்படி நிறைய கற்றுக் கொடுக்கிறேன். மாதம், 10 ஆயிரம் ரூபாய்சம்பாதிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக