வியாழன், 11 அக்டோபர், 2012

அந்தோ பாவம்! தமிழ் த் தேசிய க் கூட்டணி த் தலைவர்கள் தில்லி பயணம்

அந்தோ பாவம்! தமிழ் த் தேசிய க் கூட்டணி த் தலைவர்கள் தில்லி பயணம்

தினமலர்
கொழும்பு : இலங்கையைச் சேர்ந்த, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள், மூன்று நாள், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.இலங்கையில், விடுதலை புலிகளுடனான, சண்டை ஓய்ந்த பிறகு, அந்நாட்டு அரசு, தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்திய அரசும் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது. ரயில்வே திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வடக்கு மாகாணத்தில், அடுத்த ஆண்டு, தேர்தல் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் ஏழு பேர், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ,அழைப்பின் பேரில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சம்பந்தன் தலைமையில் டில்லி சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களை இவர்கள் சந்திக்கின்றனர்.தமிழர்களுக்கு, அதிகாரங்கள் வழங்க வழிவகை செய்யும், 13வது சட்டத் திருத்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர்.

1 கருத்து:

  1. இலவைநம்பிப் போகும் இழவு வீட்டுக் கிள்ளைகள்.
    சிங்களன் எதையாவது எலுப்பு மாதிரி கொடுத்தாவது உங்கள் பிச்சைப் பசியைப் போக்க நாங்கள் கட்டாயமாக உதவிவோம்.இங்கே நாங்கள் தண்ணீர் கூடத் தமிழனுக்குக் கொடுப்பதில்லை. உங்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால் அதுதான் தவறு. எனவே நாங்க சேர்ந்து பேசித் தருவதை சும்மா எடுத்துக்கிட்டு பதவியைப் பிடிச்சுக்கிட்டே காலத்தை ஓட்டுங்கள். தமிழ் பிரதேசமெல்லாம் கபளீகரம் செய்த பிறகு புதைக்கக் குழியாவது தராமல் ஏமாற்றவா போகிறோம்?? ஆகவே தைரியமாகப் போய்வாருங்கள். மங்களம் என்று விட்டு ஓசி உணவுடன் அனுப்பி விடுவார்கள். தமிழன் தலையெழுத்து ஒன்றில் முட்டாள் அல்லது முடிச்சு மாறி மட்டுமேதான் தலைவர்கள் என்று இருக்கிறார்கள். நிச்சயமாக ஒரு அறிக்கை வரும். அதை வாங்கி நாக்கை வழித்துவிட்டு தூரப் போட வேண்டியதுதான்.

    தலைவனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா!

    எழிலன்

    பதிலளிநீக்கு