புதன், 10 அக்டோபர், 2012

நல வாழ்விற்கு முதல் இடம்: மத்திய மந்திரி கருத்துக்குக் கி.வீரமணி பாராட்டு

நல வாழ்விற்கு முதல் இடம்: மத்திய மந்திரி கருத்துக்கு க் கி.வீரமணி பாராட்டு
சுகாதாரத்துக்கு முதல் இடம்: மத்திய மந்திரி கருத்துக்கு கி.வீரமணி பாராட்டு
சென்னை, அக். 10-

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்நாட்டில் கோவில்களை உருவாக்குவதைவிட, கழிப்பறைகள் அமைப்பது மிகவும் அவசியம் என்பது போன்ற ஒரு கருத்தைச் சொன்ன மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசுக்கு உடனே பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் 63.2 சதவிகித வீடுகளில் டெலிபோன் (செல்போன் இதில் 52.3 சதவிகிதம்) மேலும் வீட்டுக்கு வீடு டெலிவிஷன் உண்டு. ஆனால், சுமார் 49.8 சதவிகித பகுதி வீடுகளில் கழிப்பறைகளே கிடையாது என்பது எவ்வளவு விசித்திரமானது. எனவே 100 சதவிகித கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்ற இலக்குக்கே முன்னுரிமை தரவேண்டும்.

பக்தி இல்லாவிட்டால் என்ன நட்டம்? சுகாதாரம் இல்லாவிட்டால் இப்படி நாள் தோறும் மனித ஆயுள் சுருங்கித் தீருமே. இதை எண்ணிப்பார்க்க வேண்டாமா. எனவே மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி அந்தக்கூற்று உண்மையே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக