மாவீரர் நாள்: எம் காவிய நாயகர்களுக்குத்
தீபமேற்றி
தூபமிட்டு த்துதிபாடும் நாள்
--- கலாநிதி இராம் சிவலிங்கம்
ஈழத் தமிழரின் வரலாற்றிலே, உலகத்தமிழரின் சரித்திரத்திலே வரலாற்றுப் பெருமைக்குரிய, பாசம் நிறைந்த, உணர்வுமிக்க நினைவுகூரும் நாள்த்தான் நாம் ஆண்டுதோறும் அனுசரிக்கும் இந்த மாவீரர் நாள். உலகெலாம் பரவி வாழும் எட்டுக் கோடி தமிழரும் ஒன்றுபட்டு பங்கு கொள்ளும் ஒரேஒரு நிகழ்வல்லவா இந்த மாவீரர் தினம்.
காலம் எல்லாம் கன்வேதானா என நாம் ஏங்கிய வேளை எமது தேவையை உணர்ந்து எம் கவலையைத் தீர்க்க,ஓடிவந்த் எம் கார்த்திகை தீபங்களே! உங்கள் ஆருயிர் அண்ணனால், எங்கள் தேசியத் தலைவரால் உங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்று உலகெலாம் வாழும் அத்தனை உறவுகளும் உங்களுக்குத் தீபமேற்றி, தூபமிட்டு, துதி பாடும் நாள்ல்லவா இந்தக் கார்த்திகை 27.
இனக்கலவரம் என்ற் போர்வையிலே, காலத்துக்குக் காலம், சிங்கள அரசும் சிங்களக் காடையரும் சேர்ந்து நடாத்தும் இன அழிப்பைத் தடுக்க, எமது பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் அரசின் போக்கை நிறுத்த, தமிழர் பிரதேசத்திலான சிங்களக் குடியேற்ற்த்தைத் தடுத்து நிறுத்த ஆயுதம் எந்திய எம் சரித்திர நாயகர்களை நினைவுகூரும் வேளைதானே நாம் வருடாவருடம் அனுஷ்டிக்கும் மாவீரர் வாரம்.
அரச பயங்கரவாதத்துக்கு எதிராக
ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை
எமக்கும், உலகுக்கும் உணர்த்திய உன்னதப் பிறவிகளல்லவா இந்த மனித மாணிக்கங்கள். மனிதரூபத்தில் வந்து மாயாஜாலங்கள் புரிந்த எம் மந்திரவாதிகள். சாவிலும் வாழும் சந்ததி எனற பெருமையை எமக்குத்
தேடித்தந்த எம் காவலர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.
இந்த மனித தெய்வங்களின் விந்தைமிகு செயல்களை, வீரம் செழிந்த நிகழ்வுகளை, பாசம் நிறைந்த பங்களிப்பை நினைவுகூரும் அதேவேளை, எம்மவர் வீரவரலாற்றை எமது இளைய தலை முறைக்கும் இயல், இசை, நாடக வடிவிலே எடுத்தியம்பி உணரவைக்கும் காலமல்லவா இந்த மாவீரர் வாரம்.
எத்தனையோ உதவிகள் வேண்டப்படும் வேளையில், பல விட,யங்கள் கவனிப்பாரற்று இருக்கையில், எண்ணற்ற தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யாத நிலையில், செய்து முடிக்க வேண்ண்டியவை செயல் இழந்து நிற்கையில் மாவீரர் நாளை போட்டிபோட்டு செய்ய முனைவது, வேண்டப்படாததும் தேவையற்றதுமாகும். மாவீரர் நாள, வருடாவருட விவாத்ததுக்கான் ஒரு விடயமோ அல்லது வேடிக்கைக்கான நிகழ்சியோ இல்லை. மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர்களின் ஆத்ம சாந்திக்காக .உரிமையுள்ள உறவுகளால், ஆண்டாண்டு நடாத்தப்படும் ஓர் நினைவுகூரலே.
முப்பது ஆண்டுகள் எமது போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த அந்தத் தர்மவான்களிடமிருந்து, இத்தனை காலமும் இந்த நிகழ்வைச் செய்த உத்தமரிடமிருந்து இந்த நிகழ்வை கூறுபோட நினைப்பது நிட்சயமாக எம்மினத்துக்கு நன்மை தரும் செயலல்ல. இதை நாம் அனைவரும் நன்கு புரிந்து செயற்பட வேண்டும். ஒழுங்காக பக்குவத்துடன் நடக்கும் இந்த நிகழ்வையும் குழப்பி, சீரழித்து எம்மினத்தை ஓர் பண்பாடற்றற, நன்றிமறந்த இனமாக சித்தரிக்கவா இந்த சிந்தையற்றவர்களின் வருடாந்த நாடகம்.
எமது கனவை உங்கள் இலட்சியமாக்கி எம் மானம் கார்த்த மறவர்களே! உங்க:ள் துயிலும் இல்லங்களை அழித்து உங்கள் உறக்கத்தை கலைத்துவிட்டதாக கொக்கரிக்கிறார்களே அந்தக் கோமாளிககள், எம்மைப்பற்றி அவர்களுக்கு என்னய்யா தெரியும்? எமது வேலைகள் முடியாத வேளை, எமது விடுதலை என்னும் நிட்சயிக்கப்படாத நிலையில் எப்படிய்ப்பா எம்மால் தூங்க முடியும்? எதிரிகள் ஒருபுறம் துரோகிகள் மறுபுறம், எம்மோடு சேர்ந்து எம்மோடு வாழ்ந்து எம்மவர் போல் நடித்து எம்மை அழிக்க முயலும் கும்பல் இன்னொருபுறம், இவர்களுடன் சுழன்று போராடும் நாமும் உங்களைப் போல் என்னும் உறஙகவில்லையே எம் உற்வுகளே.
எமது கனவை உங்கள் இலட்சியமாகக் கொண்டு போர்முனையில் மாயஜாலங்கள் புரிந்து எதிரிகளை திணறவைத்த நீங்களும், இறுதிப் போரான் அரசியல் போரை இங்கிதமாக எடுத்துச் செல்லும் நாங்களும் துயிலும் கால்ம் வெகு தொலைவில் இல்லையப்பா. இன்று விழிப்படைந்த சர்வதேசத்தின் பங்களிப்புடன் எமது விடுதலையை நாம் விரைவில் பெற்றதும், நீங்கள் வகுத்த தமிழர் சாம்பிராட்சியத்தில் உங்களுக்கான துயிலும் இல்லங்களை மீண்டும் அமைத்து, அங்கு நீங்கள் நின்மதியாக தூங்கும்வரை நாம் உறங்கமாட்டோம் எம் தெய்வங்களே. இது சத்தியம்.
sivalingham@synpatico.ca
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக