http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=561776ஒளிப்படத் தொகுப்பு
எழுபது வயதில் போட்டோகிராபி கற்ற லெனி!
இவர் இறக்கும் போது இவருக்கு வயது 101. இறப்பதற்கு முதல் நாள் கூட ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்து கொண்டவர்.
முக்கிய குறிப்பு: புகைப்படக்கலைஞர் லெனி தொடர்பான மற்ற படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ காலரி பகுதியை கிளிக் செய்யவும்.
எழுபது வயதில் போட்டோகிராபி கற்ற லெனி!
எழுபது வயதில் அன்டர் வாட்டர் போட்டோகிராபி கற்றுக்கொண்டு 101 வயது வரை
புகைப்படம் எடுத்தவர்.1902-ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம்தேதி ஜெர்மனியின்
பெர்லின் நகரில் பிறந்தார். ஒவியராக ,நடனக்கலைஞராக, நடிகையாக,
ஒளிப்பதிவாளராக, தயாரிப்பாளராக படிப்படியாக எழுச்சி பெற்றவர்.
அதிலும் 1936ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை முதன் முதலாக ஆவணப்படமாக தொகுத்தவர் இவரே. இவர் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக அறுபதிற்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்களை இயக்கினார். ஸ்லோ மோஷன், பனோராமிக் வியூ, பிஷ் ஐ என்று இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்துவித தொழில்நுட்பத்தையும் அப்போதே செயல்படுத்திக்காட்டியவர்.

ஜெர்மனியின்
சர்வாதிகாரி ஹிட்லரை உலகிற்கு படமாக அறிமுகப்படுத்தியவர். அவருக்காக அவர்
நடத்திய நாஜிகட்சியின் மாநாடு மற்றும் பிரம்மாண்டமான பேரணியை
ஆவணப்படுத்தியவர். பின்னர் ஆட்சி மாறியதும் ஹிட்லரின் ஆதரவாளர் என்ற
நோக்கில் கைது செய்யப்பட்டவர். ஆனால் இவர் கைது செய்யப்பட்டதில் எந்தவித
நியாயமும் இல்லை, இவர் ஒளிப்பதிவாளராக தனது கடமையைச் செய்ததை தவிர வேறு
எவ்வித தவறும் செய்ததற்காக முகாந்திரம் இல்லை என்று சொல்லி நீதிபதியால்
விடுதலை செய்யப்பட்டவர்.
இப்படி நடனமாதுவாக, நடிகையாக,
சினிமா தயாரிப்பாளராக, ஒளிப்பதிவாளராக பல்வேறு பரிணாமங்களை
எடுத்திருந்தாலும் கடைசியில் இவரது மனது மையம் கொண்ட இடம் புகைப்படத்துறையே
ஆகும்.
நடக்கவே தள்ளாடும் எழுபது வயதில்தான் அவர் அண்டர் வாட்டர்
போட்டோகிராபியை (நீருக்குள் முழ்கி புகைப்படம் எடுக்கும் கலை) கற்றுக்கொள்ள
ஆரம்பித்தார். அதன்பிறகு அந்த துறையில் மூன்று புத்தகங்கள் போடுமளவிற்கு
தேர்ச்சி பெற்றவரானார்.
ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானுக்கு
சென்று அங்குள்ள பழங்குடிகள் பற்றி இவர் எடுத்த படங்கள் ஏõராளம், இதை
வைத்தும் பல புத்தகங்கள் போட்டுள்ளார். அவை ஒவ்வொன்றும் பழங்குடிகள் பற்றிய
பாடபுத்தகங்கள் என்றே இன்றும் கருதப்படுகிறது.
இவர் இறக்கும் போது இவருக்கு வயது 101. இறப்பதற்கு முதல் நாள் கூட ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்து கொண்டவர்.
தான் ஏற்றுக்கொண்ட துறையில் புதுமையை புகுத்தியதும், சமுதாய நலனுடன் கடினமாக உழைத்ததும் இவருக்கு இறவா புகழை தேடித்தந்துள்ளது.
முக்கிய குறிப்பு: புகைப்படக்கலைஞர் லெனி தொடர்பான மற்ற படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ காலரி பகுதியை கிளிக் செய்யவும்.
- எல்.முருகராசு, தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக