வெள்ளி, 12 அக்டோபர், 2012

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்

First Published : 12 October 2012 12:29 PM IST
காவிரியிர் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் இன்று நெய்வேலி அனல்மின் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், இன்று காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக