ஈழத் தமிழர்களை திறந்தவெளி முகாமுக்கு அனுப்ப வேண்டும்: வைகோ
சென்னை, ஆக.25: பூவிருந்தவல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபடும் செந்தூரனையும் ஈழத் தமிழர்களையும் திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்ப
வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஈழத்து இளைஞர் செந்தூரன் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமில் ஆகஸ்ட் 6-ம் தேதி
முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் சொட்டுத் தண்ணீரும் பருகாமல் போராட்டம் நடத்துகிறார்.
செந்தூரன் போராட்டம் முற்றிலும் நியாயமானது. இலங்கையில் பாதிக்கப்பட்டு
தமிழகம் வரும் தமிழர்கள் மீது கியூ பிரிவு போலீஸார் பொய் வழக்குகளைப் புனைந்து
சிறப்பு முகாம் சிறைகளில் அடைக்கின்றனர்.
இந்த நிலையில் செந்தூரனின் அத்தை கமலாதேவி சென்னை அரசு பொது மருத்துவமனையில்
ஆகஸ்ட் 21-ம் தேதி காலமானார்.
செந்தூரன் உண்ணாவிரதம் இருக்கும் துயரத்திலேயே அவர் இறந்துள்ளார்.
செந்தூரனையும், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் திறந்த வெளி
முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்.
செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காவல்துறையும் , தமிழக அரசுமே
பொறுப்பாளி என்று வைகோ கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக