செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தை: எலிகள் கடித்து க் குதறிய அவலம்

அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தை: எலிகள் கடித்து க் குதறிய அவலம்
தினமலர்

சென்னை:சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவ மனையில், இறந்த குழந்தையை எலிகள் கடித்து குதறிய அவல சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் கொந்தளிப்படைந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறை பிரசவம்:

அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர், ரஞ்சித் குமார், 28, துப்புரவு தொழிலாளி. இவருடைய மனைவி, மலர், 26. இவர் பிரசவத்திற்காக, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரத்தில், இவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இரு நாட்களுக்கு முன்பு, குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால், "இன்குபேட்டரில்' மருத்துவர்கள் வைத்திருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை இறந்தது.

எலிக்கு இரை:

மாலையில், குழந்தை இறந்தது தொடர்பாக, மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர், குழந்தையின் சடலத்தை, பெற்@றார் பார்க்க சென்ற போது, அதன் இடது கன்னம் முழுவதும் எலிகள், கடித்து குதறியிருப்பதாக தெரியவந்தது.இதை அடுத்து நேற்று காலை, மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு @Œர்க்கப் பட்டு இருந்த, மற்ற பெண்களின் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார சீர்கேடு:

பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களின் குடும்பத்தினர், மருத்துவமனை சூழலால் பெரும் அல்லல்படுவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வேதனையுடன் குறிப்பிட்டனர்.இது குறித்து, சிலர் கூறுகையில், "தனியார் மருத்துவமனை போல், இங்கு அதிகளவில் பணம் வசூலிக்கின்றனர். பெண்ணை பிரசவ வார்டில் சேர்ப்பதில் இருந்து, வீட்டிற்கு அழைத்து செல்வதற்குள், 5,000 ரூபாயாவது செலவாகி விடும். இருப்பினும் பாதுகாப்பான ‹ழல் இல்லை. இறந்த குழந்தைக்கே இந்த நிலை என்றால், அங்கு, அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் நிலை என்னாவது? அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

அரசு மருத்துவமனைகளுக்கே உரிய லட்சணத்துடன், இந்த மருத்துவமனையும் காட்சியளிக்கிறது. எங்கும், மருத்துவக் கழிவு மற்றும் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால், மருத்துவமனைக்குள் எலிகள் தாராளமாக நடமாடுகின்றன. நாய்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன."மருத்துவமனை வளாகத்துக்குள் சுகாதாரத்தை ஏற்படுத்தினால் தான், இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்,' என, இங்கு சிகிச்சைக்கு வரும் பெண்கள் கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனை:

இதுகுறித்து, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) ரமேஷ் கூறும்போது,"" இச்சம்பவம் குறித்து, மருத்துவ கல்வி துணை இயக்குனர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் கன்னத்தில், எலி கடித்ததால் காயம் ஏற்பட்டதா அல்லது அதன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் இவ்வாறு ஏற்பட்டதா என்பது விசாரணையில் தான் தெரிய வரும். இதற்கிடையில், பெற்றோர் அளித்த புகாரின் காரணமாக, வீடியோ பதிவுடன், குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கை, மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் வழங்கப்படும்,'' என்றார்.

10 முதல் 1,000 வரை :

*மருத்துவமனைக்கு உள்ளே செல்ல வேண்டும் என்றால், நோயாளியானாலும், அவரைப் பார்க்க வந்தோர் ஆனாலும்,10 ரூபாய் கொடுக்க வேண்டும்.
*நோயாளியை "ஸ்ட்ரெச்சரில்' கொண்டு செல்ல வேண்டும்என்றால் 300 ரூபாய் லஞ்சம்.
*பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்வதற்குக் கூட, ஆண் குழந்தை என்றால் 1,000 ரூபாயும், பெண் குழந்தை என்றால் 500 ரூபாயும் கொடுக்க வேண்டும்.
*செவிலியர்களில் சிலர் எந்நேரமும் அலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
*இதனால் மருந்துகள் கொடுப்பதிலும் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
*நேற்று முன்தினம் மூன்று குழந்தைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக