வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

இன்று வானில் நீல நிலா!

இன்று வானில் நீல நிலா!
dinamaniபுது தில்லி, ஆக. 30: எப்போதாவது நிகழும் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் "ஒன்ஸ் இன் ப்ளூ மூன்' (நீல நிலாக் காலத்தில்) என்று குறிப்பிடுவது வழக்கம்.அதாவது வானில் வெண்மையாகத் தோன்றும் நிலா நீல வண்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இத்தொடர் அமைந்துள்ளது. அதே சமயம், இதுவும் வானியல் நிலைப்படி சரியாகவே அமைந்துள்ளது. அப்படி ஓர் அரிய நாள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) அமைகிறது. அன்றைய வானில் இரவு தோன்றும் நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.""இந்த மாதத்தில் (ஆகஸ்ட்) முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் முறையும், வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலா நீலமாகத் தோற்றமளிக்கும். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்'' என்று தில்லியில் உள்ள அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பு (ஸ்பேஸ்) தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களிடையே அறிவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தகவல்களைப் பரப்பி வருகிறது. அடுத்த நீல நிலா 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.""வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி, இரவு 7.28 மணி வரை தோன்றும்'' என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக