திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இருப்புப் பாதைகள் அருகே வீடுகள் கட்டித்தர திட்டம்







இருப்புப் பாதைகள் அருகேயுள்ள குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித்தர தொடரி அமைச்சகம் திட்டம்
புதுடில்லி:ரயில் பாதைகள் அருகேயுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, குடிசைவாசிகளுக்காக, மும்பை, டில்லி மற்றும் திருச்சியில், குறைந்த செலவில் வீடுகளை கட்ட, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, டில்லி யில், ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில் பல இடங்களில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், 1.34 லட்சம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதாவது, ரயில்வேக்கு சொந்தமான மொத்த நிலங்களில், 981 எக்டேர் நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.வடக்கு ரயில்வே மண்டலத்தில், 220 எக்டேரும், வடகிழக்கு எல்லை ரயில்வே பகுதியில், 167 எக்டேரும், தென் கிழக்கு மண்டல ரயில்வே பகுதியில், 162 எக்டேர் நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன.சீரான மற்றும் விரைவான ரயில் போக்குவரத்திற்கு தடையாக, ரயில் பாதைகளை ஒட்டியே, இந்த ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றவும், அந்த இடங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு, மாற்றிடமாக, குறைந்த செலவில் வீடுகளை கட்டிக் கொடுக்கவும், ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு, "சுகி கிரஹா' என, பெயரிடப்பட்டு, டில்லி, மும்பை நகரங்களில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மும்பை நகரில், 22 கோடி ரூபாய் செலவிலும், டில்லியில், 11 கோடி ரூபாய் செலவிலும், குறைந்த செலவிலான வீடுகள் கட்டப்பட உள்ளன.இந்த திட்டமானது, 2011-12ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டிலேயே, அப்போதைய, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இந்த வீடு கட்டும் திட்டம், நாட்டில் முதல் கட்டமாக, டில்லி, மும்பை, திருச்சி, சீல்தாக் மற்றும் சிலிகுரி ஆகிய ஐந்து இடங்களில் செயல்படுத்தப்படும்.

இதுதவிர, இந்த ரயில் பாதைகளை ஒட்டிய ஆக்கிரமிப்பு பிரச்னை, மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிசை வாசிகளை மாற்ற, மாநில அரசுகளுடன் இணைந்து, மேற்கொள் ளப் படும், "ராஜிவ் அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழும், ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கு வீடுகள் தர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.- தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக