திங்கள், 27 ஆகஸ்ட், 2012

குடும்பத்தை க் காப்பாற்ற மரம் ஏறி ச் சம்பாதிக்கும் சிறுவன்







குடும்பத்தை க் காப்பாற்ற மரம் ஏறி ச் சம்பாதிக்கும் சிறுவன் : முன்னேறி  சிறு சுமை யூர்தி வாங்க ஆசை

மேட்டூர் : குடும்பத்தை காப்பாற்றிய தந்தை, வீட்டில் முடங்கியதால், இளம் வயதிலேயே, தினமும், 60க்கும் மேற்பட்ட தென்னை அல்லது பனை மரங்கள் ஏறி, குடும்பத்தை காப்பாற்றும் சிறுவனின் செயல், கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த நிலவுக்கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சின்னராஜ். இவரின் மகன் கார்த்திக்,17. சின்னராஜ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது, பனை மரத்தில் நுங்கு வெட்டுவது போன்ற வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். ஒரு ஆண்டுக்கு முன், சின்னராஜ் காலில் காயம் ஏற்பட்டதால், அவரால் மரம் ஏற முடியவில்லை.வருமானம் நின்று போனதால், குடும்பத்தினரும் கஷ்டப்பட்டனர். இதனால், சிறுவன் கார்த்திக், குடும்ப பாரத்தை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெற்றோரை காப்பாற்ற, இரண்டு ஆண்டுகளாக சிறுவனும், பனை மரம், தென்னை மரம் ஏறும் வேலை செய்து, அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறான்.
கார்த்திக் கூறியதாவது:


சிறு வயதிலேயே மரம் ஏறச் செல்லும் தந்தைக்கு உதவியாக செல்வேன். இதனால், ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். திடீரென தந்தை காலில் அடிபட்டதால், விளையாட்டாக பழகிய மரம் ஏறும் தொழில், எனக்கு கை கொடுத்தது.தினமும், 50 முதல், 60 தென்னை அல்லது பனை மரங்கள் ஏறி, காய்கள் பறித்துப் போடுவேன். ஒரு மரம் ஏறி காய் பறித்தால், 20 ரூபாய் கூலி கிடைக்கும். பனை மரத்தில் ஓலை வெட்டி போட்டால், மொத்தம், 25 ஓலைக்கு, 50 ரூபாய் கூலி வழங்குவர்.எங்கள் பகுதியில் பெரும்பாலான தோட்ட உரிமையாளர்கள், தேங்காய் மற்றும் நுங்கு பறிப்பதற்கு என்னையே கூப்பிடுவர். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது. எனினும், 30 மரங்கள் ஏறிய பின், கால் பாதத்தில் கடுமையான வலி ஏற்படும். ஓரளவு சம்பாதித்தவுடன் ஆட்டோ அல்லது மினி லாரி வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.
- தினமலர்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக