வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு

குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு

பதிவு செய்த நாள் : 31/08/2012  நடபு


குமரித்தமிழ்வானம்அமைப்பின்சார்பில் தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும் நாகர்கோயில் தமிழ்வானம்அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக்கவிஞர் நா.முத்திலவேனார் தலைமை தாங்கினார்.  திருவாளர்கள் இரா.முத்துசாமி, சோ .தமிழ்ச்செல்வன், மகேந்திரன், செல்லச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கநர் சுரேசு வரவேற்புரை நல்கினார்.
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப்பொதுச்செயலர் முனைவர் பத்மநாபன் பேராசிரியர் சி.இலக்குவனார்  உருவப்படத்தைத் திறந்து வைத்து தமிழ்க்காப்புத் தளபதியாகப் பேராசிரியர் திகழ்ந்தமை குறித்துஉரையாற்றினார்.
கவிஞர் முருகானந்தம், “ பண்பாட்டின் காவலர் இலக்குவனார்”  என்னும் தலைப்பில் கவிதை பாடினார்.
திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அனுப்பியிருந்த வாழ்த்துரை வாசிக்கப்பெற்றது. கவிஞர் தமிழ்க்குழவி ,இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன், சிவமுருகன், பிதலிசு, சிவனி சதீசு, மீராசா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்த்தேசியப் பேரவைத் தலைவர்  ” மணிமாறன் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி ” என்னும் தலைப்பில் தமிழ்க்காப்பில் தலைசிறந்த போராளியாகத் திகழ்ந்த பேராசிரியரைப்பற்றிச்சிறப்புரை ஆற்றினார்.
திரு மகாதேவன் நன்றிநவின்றார்.
நன்றி :தினத்தந்தி, தமிழ் முரசு






(படம் 1.ஆய்வறிஞர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவிக்கிறார்.
படம் 2. தமிழ் வானம் இயக்குநர் திரு செ.சுரேசு உரையாற்றுகிறார்.
படம் 3. தமிழ்த்தேசியப் பேரவை த் த்லைவர் திரு மணிமாறன் சிறப்புரை ஆற்றுகிறார்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக