வியாழன், 30 ஆகஸ்ட், 2012

வலி இல்லாமல் வாழலாம்!









சொல்கிறார்கள்
வலி இல்லாமல் வாழலாம்!
ரோபோ உதவியுடன் வலியைக் குறிப்பறிந்து குணமாக்கும், வலி மேலாண்மை சிகிச்சையைப் பற்றி கூறும் டாக்டர் மதன்குமார்: வலி என்பது மிகவும் சிக்கலான விஷயம். உடலில் ஏதாவது ஓர் இடத்தில் வலி இருந்து கொண்டேயிருந்தால், அது ஒருவரின் செயல் பாடு, மனம் இரண்டையும் பாதிக்கும். வலியை சமாளிப்பது சுலபமான காரியம் இல்லை. இவற்றை தவிர்ப்பதற்காக, வலி மேலாண்மை என்றொரு தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், "ரோபோ' உதவியுடன், துல்லியமான வலி மேலாண்மையை அறிமுகம் செய்துள்ளோம். பொதுவாக, வலி இருக்கும் பகுதியில், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து, வலி நரம்பில் தோராயமாக ஊசியை செலுத்தி, சிகிச்சை செய்வது தற்போதைய நடைமுறை. "ரோபோ' உதவியுடன் செய்யும் இந்தச் சிகிச்சையில், துல்லியமாக குறிப்பிட்ட வலியுள்ள நரம்பில் ஊசியை செலுத்த இயலும். தவிர, நரம்புகளின் நுனியில் உள்ள வலியை சரி செய்ய, சிறப்புக் கருவி; கழுத்திலிருந்து கைகளுக்கு செல்லும் நரம்புகள்; கால் நரம்புகள் திசுக்களில் உள்ள தழும்புகள் அழுத்துவதால், நரம்புகளில் ஏற்படும் வலி; முதுகுத் தண்டு தூண்டப்படுவதால் ஏற்படும் நரம்பு வலி போன்றவற்றைக் கண்டறிய, இ.எம்.ஜி., எனும் பரிசோதனை முறை உள்ளது. வயிறு தொடர்பான நாள்பட்ட பிரச்னை, நரம்புக் கோளாறு, கேன்சர் போன்றவற்றிற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை செய்பவர்களுக்கு, இந்த வலி மேலாண்மை சிகிச்சை மிகவும் பயனுள்ளது. குறிப்பிட்ட எந்த இடத்தில் வலி உள்ள தோ, அங்குள்ள தசைகளின் செயல்பாட்டிற்கு உதவும், மோட்டார் நரம்பை பாதிக்காமல், வலியை உண்டாக்கும் சென்சரி நரம் பை மட்டும், செயலிழக்கச் செய்து விடுவோம். இந்த முதல்கட்ட சிகிச்சையில், எந்த அளவிற்கு வலி குறைந்துள்ளது என்பதைப் பொறுத்து, பிசியோதெரபி போன்றவற்றைச் செய்வோம். குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் வலி இருந்தால், மீண்டும் ஒரு முறை சிகிச்சை தேவைப்படும். பெரும்பாலும், முதல் முறையிலேயே சிகிச்சையைத் தொடர்ந்து தரப்படும் பிசியோதெரபி, மியூசிக் தெரபி ஆலோசனை இவற்றிலேயே, முற்றிலும் வலி குணமாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக