புதன், 1 செப்டம்பர், 2010


Wednesday, September 01, 2010

Saturday, August 14, 2010


கே.பியிடம் அடிபணிய மறுத்த போராளிகள் மணலாற்றில் வைத்து கொடூரப் படுகொலை

முல்லைத்தீவின் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் அண்மையில் சண்டை நடைபெற்றதாக வெளிவந்த செய்திகளும், அதன் பின்னர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான படையினர் அங்கு வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் போராளிகளே அங்கு கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பல்வேறான மாறுபட்ட செய்திகள் வெளிவந்திருந்தன.



இச்செய்தி தொடர்பான உண்மைத் தன்மைகளில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக, இது குறித்து ஆராய்ந்தபோது பெரும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான, முல்லைத்தீவில் கடமை ஆற்றும் படை உயர் அதிகாரி ஒருவர் இந்தத் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

சிறீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு மறைமுக சித்திரவதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெருமளவான போராளிகள் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், மேலும் ஒரு ஆதரபூர்வமான தகவலை சரத் பொன்சேகாவின் ஆதரவு உயர்நிலை படை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

சிறீலங்கா இராணுவத்திடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய சில போராளிகளைக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களிடையே திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கே.பி ஊடாக மகிந்த அரசு முனைந்துள்ளது. அதற்கு இந்தப் போராளிகள் ஒத்துக்கொள்ள மறுத்தமையே இந்தக் கொடூரப் படுகொலைக்கு காரணம் என்று தெரியவருகின்றது.

கே.பியால் அமைக்கப்பட்ட நெடோ அமைப்பு ஊடாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் பணம் கறக்கும் நோக்கில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு அறிந்த விடுதலைப் புலிகளை அந்த அமைப்பில் இணைந்து செயற்படுமாறு கே.பி ஊடாக வலியுறித்தப்பட்டுள்ளது. தம்முடன் இணைந்து செயற்படுமாறு போராளிகளை கே.பி கடுமையாக வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றார். ஆனால், குறிப்பிட்ட பொறுப்பான நிலைகளில் இருந்த போராளிகள் பலர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறீலங்கா புலனாய்வாளர்களாலும் கே.பியின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களிடம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு இறுதிவரை ஒத்துக்கொள்ள மறுத்த சில முதன்மை நிலைப் போராளிகளே மணலாற்று காட்டினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு, பின்னர் அவர்களது உடலங்களும் எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளன.

சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கும் சிங்கள காடையர்களைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றே இந்த அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. படையினரால் கைதுசெய்யப்பட்ட போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள் ஆகியோரை தமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள சிறீலங்கா அரசு முயன்று வருகின்றது.

இதில் ஒரு தொகை போராளிகளை தமக்கு கீழ் செயற்படும் அளவிற்கு மாற்றியும் உள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் கொள்கையில் இருந்து மாறாத முதன்மை பொறுப்பாளர்கள் சிலரை மாற்றும் முயற்சியினை கே.பியுடன் இணைந்து கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்.

கோத்தபாய ராஜபக்சவின் ஏற்பாட்டில் கே.பி. போராளிகளை அடிக்கடி சென்று சந்தித்துவந்த செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியமை தெரிந்ததே. முல்லைத்தீவின் புதுமாத்தளன் பகுதியில் தற்போதும் போராளிகளை கொண்ட வதைமுகாம் ஒன்று செயற்பட்டுக்ககொண்டிருக்கின்றது.

அத்துடன், சிங்கள குடியிருப்புக்களுக்குள்ளும், பதவியா காட்டிற்குள்ளும் மற்றும் பல பகுதிகளிலும் இவ்வாறான இரகசிய தடுப்பு முகாம்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பகுதிகளில் உள்ள முகாம்களில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் தான் கொல்லப்பட்ட இந்த போராளிகள் என்று தெரியவருகின்றது. கொல்லப்பட்ட போராளிகளினது விபரங்கள் விரைவில் வெளிவரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, கொல்லப்பட்ட இந்தப் போராளிகளிடம் மேலும் சில தகவல்களை கே.பி ஊடாக சிறீலங்கா பெற முயன்றுள்ளது.

அதாவது கே.பி விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராக இருந்த காலகட்டங்களில் சில குறிப்பிட்ட முக்கிய ஆயுதங்கள் வாங்கி அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இது கே.பிக்கு தெரிந்த விடயம். ஆனால், அந்த ஆயுதங்களை இதுவரை சிறீலங்காவினால் கைப்பற்ற முடியவில்லை. அவற்றை கே.பி ஊடாக அறிந்து கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சிக்கு இந்தப் போராளிகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் வெளிநிர்வாகத்தில் நின்ற பெறுமதியான வாகனங்களைக் கையாண்டவர்களும் இதற்குள் அடங்குகின்றார்கள். அத்துடன், சில மாவட்டங்களில் இருந்துகொண்டு கே.பி ஊடாக சர்வதேச தொடர்புகளுடன் இருந்த சில பொறுப்பாளர்களும் இதில் இருந்துள்ளனர். இவர்களே கொல்லப்பட்டுள்ள போராளிகளில் அடங்கியுள்ளதாக தெரியவருகின்றது. அதாவது முள்ளிவாய்க்கால் வரை வந்தும் இதுவரை பல தேடுதல்களை நடத்தியும் அந்த ஆயுதங்களைக் கைப்பற்ற முடியவில்லை.

அத்துடன், இதுவரை வெளிநிர்வாக பகுதியில் உள்ள செயற்பாட்டுப் பொருட்களையும் சிறீலங்காப் படையினரால் கையகப்படுத்த முடியாத நிலையில் இவை எல்லாம் எங்கு என்றும், இறுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்த பெருமளவான நகைகள் எங்கு இருக்கின்றன? என்றும் கோத்தபாய ராஜபக்சவின் விசாரணைக் குழுவினாலும் பின்னர் கே.பியினாலும் அப்போராளிகளிடம் தோண்டித்துருவி விசாரித்தபோதும் இவை எவற்றுக்கும் அவர்கள் பதில் கூறாது, விடுதலைக் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், கே.பியினாலும் மனமாற்றம் செய்யமுடியாத போராளிகளில் சுமார் 25 வரையான முதன்நிலைப் போராளிகள் இனங்காணப்பட்டு மணலாற்றுக் காட்டுக்குள் கொண்டுசெல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு உடலங்களின் தடயங்கள் எதுவும் இல்லாதவாறு, ரயர்கள் போட்டு ஏரிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா படை அதிகாரியின் கருத்தில் இருந்து அறியமுடிகின்றது.

இவர்களது படுகொலை நடவடிக்கைக்கு முன்னதாக முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினரிடம் கோத்தபாய ராஜபக்சவின் புலனாய்வாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு, எதுவித தடயங்களும் எடுத்துக் கொள்ளாதவாறு படையினரை கண்காணிப்பில் வைத்திருந்துள்ளார்கள்.

இதன்மூலமே இவ்வாறான ஒரு படுகொலை மேற்கொள்ளப்பட்டதை முல்லைத்தீவில் கடமை ஆற்றும் சரத் பொன்சோகாவின் ஆதரவு படை அதிகாரி அறிந்துகொண்டுள்ளார்.  இந்த அழிப்பு நடவடிக்கைக்கென கோத்தபாய ராஜபக்சவினால் கையாளப்படும் காடையர்கள் கொண்ட சிறப்பு படைப்பிரிவில் உள்ளவர்களே இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளும் இவர்கள் செல்பேசிகளையோ, ஒளிப்படக் கருவிகளையோ வைத்திருக்க கூடாதென இறுக்கமான தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்படை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேச போர் விதிமுறைகளுக்கு அமைய, கைது செய்யப்படும் எதிர்த்தரப்பு படையினரை மனிதபிமானத்துடன், கௌரவமாக நடத்தவேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால், அதனை மீறி இன்றுவரை கைது செய்யப்பட்ட போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விபரத்தையும், அவர்களின் பெயர் விபரங்களையும் மறைத்து வரும் சிறீலங்கா, தற்போது அவர்களை கூட்டம் கூட்டமாகக் கொண்டுசென்று படுகொலை செய்து தடையங்களையும் அழித்துவரும் நிகழ்வானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை அடிபணிய வைக்கும், தமிழ் மக்களின் பலத்தினை சிதைக்கும் பாரிய நடவடிக்கையில் இறங்கியுள்ள சிறீலங்கா, அதற்காக கே.பியின் ஊடாக தமது கட்டளைக்கு கீழ்ப்படியும் போராளிகளையும், புலனாய்வாளர்களையும் களமிறக்கிவிட்டுள்ளது.

எனவே, இது குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டியது இன்று அவசியமாக உள்ளது.

- - ஈழமுரசு-

--------
3 தினங்களுக்கு முன்னர் மணலாறில் நடந்தது என்ன?: புகைப்படங்கள் இணைப்பு

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மணலாறுக் காடுகளில் இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும், அதில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 40 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இராணுவத்தில் உள்ள சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான சிலரையே இவ்வாறு, கொண்டுசென்று கோத்தபாயவுக்கு ஆதரவான படையினர் கொன்றனர் என்றும் செய்திகள் கசிந்தது. இருப்பினும் தடுப்பு முகாமில் உள்ள புலிகளின் உறுப்பினரை புலிகளின் சீருடைகளை அணியச் செய்து அவர்களை, காட்டிற்கு கொண்டுசென்று இராணுவம் அவர்களை சுட்டுக்கொலைசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ள ஜீப் வண்டிகளில் சீருடைகள் கொத்துக் கொத்தாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

தற்போது மணலாறில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்களில் இவை நன்கு புலனாகிறது. இராணுவத்தினர் மணலாறு காட்டிற்கு செல்லும் வழியில் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. அதில் இராணுவத்தினர் பாரிய தாக்குதல் எதுவும் நடாத்தும் திட்டத்தோடு செல்லவில்லை என்று புலனாகிறது. சிறிய ரக துப்பாக்கிகள் சகிதம் வேறு நடவடிக்கைக்காகவே இவர்கள் புறப்பட்டது தெள்ளத்தெளிவாகிறது. இராணுவத்தினர் தாம் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் இராணுவத்தினர் காட்டுப்பகுதிக்கு எதற்காகச் சென்றனர், அங்கு நடைபெற்றது என்ன, என்பது இதுவரை ஆதாரத்தோடு வெளியாகவில்லை. இராணுவ முகாமில் இருந்து மணலாறு நோக்கி புறப்பட்ட இராணுவத்தையே இப் படத்தில் காண்கிறீர்கள். அடர்ந்த காடுகளுக்குள் நடந்தது என்ன என்பது குறித்து இதுவரை சரியாகத் தெரியவில்லை.






0 comments:

Newer Post Older Post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக