சென்னை, ஆக. 31: மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் புரியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.மாநில உரிமைகளை முதல்வர் கருணாநிதி பறிகொடுத்து வருவதாக ஜெயலலிதா புகார் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கத்தைத் தந்து மாநில அரசின் உரிமைகளுக்காக 1970-ம் ஆண்டுகளிலேயே மத்திய அரசுடன் வாதாடி உரிமைகளைப் பெறத் தொடங்கியது திமுக.மத்தியில் தனியொரு கட்சியின் ஆட்சி நிலவும் சூழல் மாறி பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாகும் கூட்டாட்சி அமையத் தொடங்கியது. இதன்பிறகே, தமிழகம் அதிகளவில் திட்டங்களைப் பெற்று பயனடைந்து வருகிறது.1991-ல் சந்தர்ப்பவசத்தால் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையில் மத்தியில் அமைந்த அரசை மிரட்டி இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியைக் கலைக்கச் செய்தவர் ஜெயலலிதா.1998-ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரது கூட்டணியில் வென்று அவர் பிரதமராக நீடிக்க தனது கட்சியின் ஆதரவு அளிக்கும் விஷயத்தில்-அப்போதைய திமுக அரசைக் கலைக்க ஒப்புதல் தந்தால்தான் அதிமுக ஆதரவு தரும் எனக் கூறினார் ஜெயலலிதா.இந்த நிபந்தனையைப் பெறுவதற்காகவே ஒப்புதல் தருவதில் காலம் கடத்தி, அந்த முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளில் பதவியை ராஜிநாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா. அவருக்கு மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படி புரியும்?தமிழகத்தின் நன்மைக்கு: மாநில அரசின் நன்மையையே திமுக அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டு அமைந்த மத்திய அரசுகளில் தமிழகத்தின் நன்மைக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியும், நிறைவேற்றப்பட்டும் வருகின்றன.மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்பதை, சந்தர்ப்பம் ஏற்படும் நேரங்களில் திமுக சுட்டிக்காட்டி வந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு கூறியதும் அது குறித்து மாநில அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனால், அந்த முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால்தான் மத்திய அரசு முடிவை நிறுத்தி வைத்ததாக ஜெயலலிதா கூறியிருப்பது ஏமாற்றும் செயலாகும். கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தியது.ஆனால், இதற்கு முன் ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்
ஒருவருக்குப் புரியாது.மற்றவர்க்குத் தெரிந்தாலும் செயலாற்ற இயலாது. கொடியேற்றுரிமை , பதவியாசை முதலான சின்ன சின்ன ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மாநிலத் தன்னாட்சி முழக்கம் உதவி இருக்கலாம். மற்றபடி முதல்வர் அவர்களே வருத்தப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில்தான் மாநிலத் தன்னாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற கூக்குரல் உள்ளது. தொடர்கட்டுரைகளாகவும் நூலாக ஆக்கியும் முரசொலி மாறன் தெரிவித்த கருத்துகள் யாவும் ஏட்டோடு மறைந்தன. எல்லாம் தெரிந்த கலைஞர் அவர்கள் யாருக்குத் தெரியும் அல்லது தெரியாது என்று ஆராயாமல் காங்கிரசு அல்லாத பிற மாநில அரசுகளுடன் இணைந்து துணிவுடன் போராடினால் வாகை சூடலாம். இல்லையேல் நாளும் பறி போகும் மாநில உரிமைகளால் ஊராட்சி நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்டும்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 5:34:00 AM
9/1/2010 5:34:00 AM
எங்களுக்கு நல்லா புரியுது. மாநிலத்தில வர்றது எல்லாம் கருணாநிதிக்கு மட்டும், வேற யாருக்கும் பங்கு கிடையாது. மத்தியிலே வர்றதுலே எல்லாருக்கும் பங்கு, கருணாநிதிக்கும் சேர்த்து. மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
9/1/2010 5:21:00 AM
9/1/2010 5:21:00 AM
//கூட்டாட்சி தத்துவம் ஜெயலலிதாவுக்குப் புரியாது: முதல்வர் கருணாநிதி// adha yaar solradhu?
By Mohamed bilal
9/1/2010 5:09:00 AM
9/1/2010 5:09:00 AM
பேரறிஞர் அண்ணா போதித்த மாநில சுய ஆட்சித் தத்துவமும் ...அவர் போதித்த அரசியல் நாகரிகமும் ....மக்கள் பணியே மகேசன் பணி என சுயநலம் இன்றி பணியாற்றும் பாங்கும் தான் புரட்சித் தலைவிக்கு தெரியும் ! உன்னைப் போல் பெரியார் அண்ணா என்று சொல்லி அவர்களின் கொள்கைகளை குழிதோண்டி புதைக்கத் தெரியாது ! தமிழ் தமிழ் இனம் என்று பேசி கழுத்தறுக்கத் தெரியாது ! மாநில சுயாட்சி ..கூட்டாட்சி என்று சொல்லி ஒரு மாநிலத்தை அடகு வைக்கத் தெரியாது ! மாநிலத்தின் உரிமைகளை பண்டமாற்று முறையில் உன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக சுகத்திற்காக விட்டுக் கொடுப்பது போல் துரோகம் செய்யத் தெரியாது ! உன்னைப் போல் ஊழல் செய்யவும்...அருவருக்கத் தக்க அரசியல் வியாபாரம் செய்யவும் தெரியாது !!! இது போன்ற விஷயங்களில் நீ உலக மகா கில்லாடி என்பதனை ஏற்றுக் கொள்கிறோம் ! @ rajasji
By rajasji
9/1/2010 2:23:00 AM
9/1/2010 2:23:00 AM
Dear dinamani readers happy, happy news. Today dinamani's RAJASJI left for Kodanadu to have fun, exiting, lesbian games with Jeya and Sasi. He will be toooo busy satisfying them. Enjoy it RAJASJI.
By S.S. Chandran
9/1/2010 1:10:00 AM
9/1/2010 1:10:00 AM
JAYA KNOWS ONLY MONEY. OTHER THAN THAT SHE DOES NOT KNOW ANYTHING
By SIRANJEEVI
9/1/2010 12:51:00 AM
9/1/2010 12:51:00 AM
கூட்டு ஆட்சி, குழம்பு ஆட்சி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இது கூட்டுக் கொள்ளை. அதுசரி, பெட்ரோல் டீசல் விலை ஏறுச்சுன்னா நீயே பந்து பண்றேன்னு போடுறியே ஒரு சீனு, அது காலை டிபனுக்கப்புரம் மதிய சாப்பாடு வரை இருந்தியே உண்ணா விரதம், அத விடக் காமடி. உண்மையான எதிர்ப்புன்னா உன் கட்சி எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல். ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் திருடனும், அப்படியே எதிர்ப்பை காட்டினா மாதிரியும் இருக்கணும். எவ்வளவு நாளைக்குத்தான் இந்த ஈனப் பிழைப்பு உனக்கு?
By இடி அமீன், உகாண்டா.
9/1/2010 12:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/1/2010 12:37:00 AM
சுயாட்சி - கூட்டாட்சி தத்துவம் புரியாதவர் ஜெயலலிதா :முதல்வர் கருணாநிதி