வியாழன், 2 செப்டம்பர், 2010

முதல்வரின் கருத்து துரதிருஷ்டவசமானது: ஏ.பி. பரதன் பேட்டி



கோவை, செப். 1: கம்யூனிஸ்டுகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறினார். தமிழகத்திலும் மாவோயிஸ்டு தாக்குதல், வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டு வருவதாக கருணாநிதி  குற்றஞ்சாட்டினார்.÷இதற்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் தூண்டிவிடவில்லை. அவர்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. இப்படியிருக்க, கம்யூனிஸ்டுகளைப் பற்றி முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியுள்ள கருத்துகள் துரதிருஷ்டவசமானது. போராட்டம் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் வேலைநிறுத்தம் அல்ல. அப்படியிருக்க முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்பது தேவையற்றது. கோரிக்கைகளுக்காக போராடுவது குற்றம் அல்ல; ஆனால் சத்துணவு ஊழியர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர். ÷அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், விடுவதும் முதல்வரின் கையில் இருக்கிறது. இப்படியிருக்க, அவர்களது போராட்டத்துக்காக கம்யூனிஸ்டுகளை பழிபோடுவது ஏற்புடையதல்ல. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பரிசாகவே ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், அடித்தட்டு மக்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள்தான் எப்போதும் துணை நிற்கும். கம்யூனிஸ்டுகளையும், மாவோஸ்டுகளையும் ஒன்றுபடுத்தி முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் எவ்வித வன்முறையும் இன்றி ஜனநாயக முறைப்படிதான் நடந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் கல்லெறிந்த சம்பவத்தையெல்லாம் அவர் மறந்துவிட்டார். இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் அது இல்லை, இது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். திமுக அரசு செய்யாத நல்ல பல விஷயங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மாவோயிஸ்டுகளைப் பற்றி நன்றாகவே தெரியும். அக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரே மாவோயிஸ்டுகளின் பேரணியை துவக்கி வைத்துள்ளதையும் முதல்வர் கருணாநிதி மறந்துவிட்டார்.  கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இதற்கு முன் திமுக கூட்டணி வைத்திருந்ததே, அப்போது கம்யூனிஸ்டுகள் பற்றி தெரியவில்லையா?. தனக்கும், தனது கட்சிக்கு எதிர்காலம் சாதகமாக இல்லை என்பதாலேயே இத்தகைய கருத்துகளை முதல்வர் கூறிவருகிறார். தமிழக முதல்வர் இனிமேல் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீதெல்லாம் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்போதுதான் மாவோயிஸ்டுகள் உருவாக்கப்படுகின்றனர். நியாயமான கோரிக்கைக்காக ஜனநாயக ரீதியில் போராடிய சத்துணவு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். அகில இந்திய வேலைநிறுத்தம்...: தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் சார்பில் செப்.7-ல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் வெற்றி அடைவதோடு, வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய போராட்டமாக இருக்கும். யாருக்கும் கவலையில்லை...: குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்தன. அந்த செயல்திட்டத்தில் இருந்து விலகும்போதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டினோம். மக்களைப் பாதிக்கும் விஷயங்களைத் தடுத்து நிறுத்தினோம். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு குறிக்கோள், கோட்பாடுகள் கிடையாது. மத்திய அமைச்சர்கள் ராசா, அழகிரி என யாராக இருந்தாலும் அவரவர் விரும்பிய போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கிடங்குகளில் இருக்கும் உணவு தானியங்களை பற்றாக்குறை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் அங்குள்ள தமிழர்களின் நலனுக்குச் சாதகமாகவே இருக்கும் என்றார்.
கருத்துக்கள்

ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை தொடர்பில சிங்கள- ஆரிய அடிமையாகக் குரல் கொடுக்கும் இவரது கட்சியை எப்படிக் குற்றம் சுமத்தினாலும் பொருததமே! நாட்டு மக்கள் மீதான வன் கொடுமைப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து தூதுப் போர்வையில் சென்றவர்கள் போரை விரைவுபடுத்திப் பல்லாயிரக் கணக்கானவர் மடியக் காரணமாக இருந்தனர். கொடுந்துயரத்துக்குக் காரணமானவர்கள் செல்வதை அங்குள்ள தமிழர்களின் நலனுக்குச் சாதகமா இருக்கும் என்று சொல்வதே இவர்களின் தமிழ்ப்பகை உணர்வை வெளிப்படுத்துகிறது. காங்கிரசோடு சேர்ந்து ஆரிய அடிமைகளான போலி மார்க்கசியக் கட்சியினரும் மடியட்டும்.தினமணிக்கு வேண்டுகோள். தமிழர் நலனுக்குப் போராடும் இ.பொ.கட்சி என்னும் பெயரில் இ.பொ.க.(மா) -ஐக் குறிப்பிட வேண்டா. அது வேறு கட்சி. இது வேறு கட்சி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 5:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நண்பர் கிருட்டிணராசு அவர்களே! உங்கள் பாராட்டிற்கு நன்றி. (தமிழனுக்கும் நன்றி.)ஆரியக் கருத்தைக் குறை கூறுவதால் ஆரியர்களை வெறுப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. ஆரியத்தைக் காப்பதற்காகச் சிலர் ஆரியம் என்பது வெள்ளைக்காரர்களால் கட்டிவிட்ட கதை என்கிறார்கள். அப்படியாயின் ஆரியம் குறித்த பல செய்திகள் சமற்கிருதத்திலேயே உள்ளனவே. தமிழ் உணர்வாளர் பாரதியார் கூட ஆரியமயக்கத்தால் வரலாற்றுப்பிழையாக ஆரிய நாடெங்கள் நாடே என்றார். ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் என்றார். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை முன்னரே தமிழறிஞர்கள் அளித்துள்ளனர். தமிழிய இதழ்களில் வந்துள்ளன. உங்களின் மின்வரியைத்தெரிவித்தால் நான் வாய்ப்பு ஏற்படும் பொழுது அவற்றைத் தெரிவிக்கின்றேன். வெள்ளையர்களை நானும் ஆரியன் நீயும் ஆரியன் என்று மயக்கி ஏமாற்றியவர்களைப் பற்றி அறிவீர்களா? தமிழ்நாட்டில் வாழும் ஒரு பகுதியினர் தங்களை ஆரியர்களாக எண்ணிக் கொண்டுதானே தமிழுக்கு எதிரான அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான சூழலில் ஆரியத்தை வெல்வதுதானே மனித நேயம் மிக்கவர்களின் கடமையாக இருக்க வேண்டும்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:39:00 PM
கம்யூனிஸ்ட் சித்தாந்தமே நம்து கூட்டு குடும்ப வாழ்க்கை முறையே ஒட்டிய துதான்.
By Indian nation
9/2/2010 3:38:00 PM
ம.கி.சந்திர மௌலீஸ்வரன், அன்புள்ள தினமணி, நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுடன் 1945க்கு முன்பிருந்தே ஒரு மிக நல்ல பழக்கம் உயிருடன் உயிராக ஒட்டிப் பிறந்திருக்கிறது! அது மிக வசதியான 'ஞாபக மறதி'. சீனப் படையெடுப்பு முதல் கம்பபோடிய இனப் படுகொலை, ரஷ்யச் சிதறல், க்யூபா (அ)ராஜாங்கம், கி.ஜெர்மனி 'வளர்ச்சி' வரை அவர்கள் மறந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவர்களுக்குப் பாதகமானவைதாம்! காலாவதியான ஒரு சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு காலம் 'தள்ளும்' இவர்கள் ஜனநாயக நாட்டிலிருந்து கொண்டுதானே செங்கொடி பிடிக்கிறார்கள்? கடந்த ஆட்சியில் 'அணுசக்திக் கொள்கை மீதான அரசு ஆதரவை மறுபரிசீலனை' செய்தே எத்தனை பெட்டி பணம் சேகரித்தார்கள்! இவர்களால் தந்தை மார்க்ஸிற்கு மாபெரும் கேவலம்! ம.கி.சந்திர மௌலீஸ்வரன், auztrapriyaa@gmail.com 02Sep2K10-Thursday-0257
By ம.கி.சந்திர மௌலீஸ்வரன்
9/2/2010 2:59:00 PM
DONT WORRY MR BARDHAN. THIS IS THE STYLE OF OUR CHIEF MINISTER. WHOEVER COMES IN HIS WAY AND TRY TO DISTURB HIS INTENTION, HE WILL CALL LIKE THIS ONLY. IT MAY BE A SURPRISE FOR YOU TO LISTEN SUCH COMMENTS FROM A PERSON WHO IS CHIEF MINISTER, BUT WE ARE USED TO IT. YOU SHD FEEL HAPPY THAT HE DID NOT CALL THE COMMUNISTS AS BARTARDS, TRAITORS AND ALL THOSE THINGS.
By Abhishtu
9/2/2010 2:17:00 PM
தமிழர் நலனுக்குப் போராடும் இ.பொ.கட்சி என்னும் பெயரில் இ.பொ.க.(மா) -ஐக் குறிப்பிட வேண்டா. அது வேறு கட்சி Yes Right Brother Ilakkuvanar Thiruvalluvan
By Tamilan In Qatar
9/2/2010 8:30:00 AM
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கருத்துகளை நான் தொடர்ந்து படித்துவருகிறேன். அவைகள் சீறிய சிந்தனையிலிருந்து உதிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அவர் அடிக்கடி "ஆரிய" "ஆரியன்" என்கிற் வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துகிறார். அது அவரின் தரத்தை தாழ்த்துகிறது. பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மொத்த சொந்தக்காரர்களான ஆங்கிலேயரின் கட்டுகதைத்தான் ஆரிய இனம் என்பதை ஆங்கிலேய சரித்திர வல்லுனர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழக சுயநல அரசியல்வாதிகள்தான் ஓட்டுக்காக பாமர மக்களை ஏமாற்றுவதற்க்காக "ஆரிய" வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்றால் அறிவு ஜீவியாக தோற்றமளிக்கும் "இலக்குவனார் திருவள்ளுவன்" கூடவா அந்த பித்தலாட்ட வார்த்தையை உபயோகிக்கவேண்டும்" இலக்குவனார் பதில் அளிக்கவேண்டும்.
By krishnaraj
9/2/2010 7:25:00 AM
I am not a supporter of Communists or their views. However the decent way in which Mr Bharathan has replied to the CM has to be appreciated. Eventhough Mr Karunanidhi oflate is saying that he is the only decent politician, his ways and means are not decent and there is no dignity either.
By G Sankaran
9/2/2010 7:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக