ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010


தில்லி மைதானப் பணியை விரைந்து முடிக்க பிரதமர் உத்தரவு


புதுதில்லி, ஆக.29- காமன்வெல்த் போட்டிக்காக புனரமைக்கப்பட்டு வரும் தில்லி நேரு மைதானத்தை இன்று பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் அப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இத்தகவல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவும், நிறைவு விழாவும் நேரு மைதானத்தில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் தொடங்க இன்னும் 35 நாட்கள் தான் உள்ளது.
கருத்துக்கள்

கொடுமை! கொடுமை! கொடுமையிலும் கொடுமை! தினமணி தமிழ் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது. முதல் பக்க வலைப்பூ விவரத்தில் ஆசிரியர் குழுவால் பரிந்துரைக்கப்படும் வலைப்பூ விவரம் இடம் பெறும் என்ற பின் குறிப்பில் இடம் பெற்ற முதல் வலைப்பூவின் பெயர் கனினிச் சொல்னிரல் I-வரிசய்.உட்சென்று பார்த்தால் தமிலுமொலி என்றெல்லாம் மொழிக்கொலை நடைபெற்றுள்ளது. தினமணியே! மாறியது ஏனோ! மாற்றியது யாரோ!பரிந்துரைத்தவர் ஆசிரியர் குழுவில் இருப்பது தினமணிக்குக் கேடு! தமிழ் ஆர்வலராகத் திகழும் ஆசிரியருக்கும் அவப் பெயர். உடனே அவரை நீக்குங்கள். வலைப்பூ விவரத்தை உடனே நீக்கிவிடுங்கள். இதைப்படிக்கும் தமிழ் நண்பர்களே நீங்களும் உங்கள் கண்டனங்களைத் தெரிவியுங்கள்! வேத‌னையுடனும் வருத்தத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 9:50:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக