1/8) மத்திய அரசிற்கு மடல் எழுதி இசைவுபெற்றுத்தருவதாகக் கூறவில்லை. பதில் பெற்றுத் தெரவிப்பதாகத்தான் கூறுகிறார். 2. உண்மையில் உணர்வு இருந்தால் உடனே தொலைபேசிவழிப் பேசியும் தம் சார்பாளர்களை நேரில் தலைமையமைச்சரைச் சந்திக்கச் செய்தும் தடையற்ற புகுவிசைவு தரச் செய்து அதனைப் பார்வதி அம்மையாரிடம் தெரிவிக்கலாமே!. அவரது விருப்பத்தைக் கேட்டு மீண்டும் அவமானப்படுத்துவதைவிட தடையை நீக்கிவிட்டு அழைக்கலாமே! 3. 1985 இல் எதிர்க்கட்சியாக இருந்தார். இப் பொழுதும் மக்கள் அதைத்தானே கூறுகின்றனர். எதிர்க்க்டசியாக இப்பொழுது கலைஞர் இருந்தால் உலகத்தின்கவனத்தை ஈர்த்துத் தமிழ் ஈழம் அமையப் போராடியிருப்பார். எனவே, அதனை ஒப்பிட்டுப் பயன் இல்லை. 4/8) மேலும் முழுமையான பேச்சில் மாண்புமிகு முதல்வர் இருவர் மட்டும் கமுக்கமாகச் சென்று பார்த்ததாகச்சிண்டு முடியப் பார்த்து உள்ளார். இருவர் சந்தித்ததற்கே அதனால்தான் தடை எனக் காவல்துறை அறிவிக்கிறது. பலர் சென்றால் இன்னும் மோசமான நடவடிக்கை எடுததிருக்காதா?5.தனது ஆட்சிநிலத்தில் தனக்கு மதிப்பளிக்காத கட்சியுடன் இன்னும் ஏன்உறவு தேவை? 6. இரு தலைவர்களைத் தடுத்துப் பெரும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தும் முதல்வருக்குத் தெரியவில்லை என்றால் ஆட்சி சரியில்லை என்றல்லவா ஆகின்றது! 7. இவருக்குத் தெரியாமல் நடந்ததென்றால் ஏன் உடனே கண்டனம் தெரிவிக்கவில்லை? 8. இந்த நாடகம் அரசியல் மேடையில் எத்தனை நாளம்மா? அம்மா, எத்தனை நாளம்மா? மானம் கெட்ட பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்புதானா அம்மா? ஐயகோ! பிழைப்புதானா அம்மா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
by I. 20-04-2010 04:09:17 IST valluvan,chennai,India
by Aarif Raj,Birmingham,UnitedKingdom 20-04-2010 14:23:45 IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக