புதன், 1 செப்டம்பர், 2010

சட்டப்பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புதிய கூட்டணி: ராமதாஸ்


வேலூர், ஆக.31: 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தனது தலைமையில் புதிய கூட்டணி அமையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:தமிழகத்தில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, மின் உற்பத்தி புரட்சி என பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. இப்போது போதைப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 புதிய மதுவகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. 4 புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.வேலூரில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகள், 8 வட்டங்கள் உள்ளன. இதனால் வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற அக்டோபர் மாதம் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். அத்தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. சென்னை விமான நிலைய இடப் பிரச்னையில் நான் முட்டுக் கட்டை போடுவதாக கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக நான் பேசினால் முட்டுக்கட்டை என்கிறார்கள். வெளிமாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸôர் குரல் கொடுக்கிறார்களே அதை எப்படி அழைப்பது?.இலங்கையில் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார் ராமதாஸ்.
கருத்துக்கள்

இந்த அறிவிப்பு வேறு அணியில் இணைவதற்கான பேரம் என்றால் பயனில்லை. ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாகரிகம், தமிழ்க்கலை முதலானவற்றில் கருத்து செலுத்திப் பரப்பி வரும் இராமதாசு தமிழ்நலக் கட்சிகளையும் அமைப்புகளையும் இணைத்துச் செயல்பட்டால் அவருக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தேர்தலைப்பற்றிக் கவலைப்படாமல் நாட்டு நலனைப்பற்றி மட்டுமே எண்ணிச் செயல்பட்டால் வெற்றி காணலாம். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 6:37:00 AM
என்ன மருத்துவரே, கருணாநிதியும் ஜெயலலிதாவும் கண்டுக்கலையா? தேர்தல் வர்ற வரைக்கும், இப்படி ஏதாவது அறிக்கை விட்டுக்கிட்டு இருங்க, ரெண்டுலே ஒருத்தரு வருவாங்க. எங்க போயிடப்போறாங்க? மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
9/1/2010 5:27:00 AM
Not only in the coming election, PMK is never, ever going to rule TN. Like Jeya ruling Kodanadu, you can rule your garden. Thats all. You son can a minister, only if you fall at the feet of Puratchi thalaivi.
By rajasji
9/1/2010 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வரும் தேர்தலில் பா.ம.க., தலைமையில் 
புதிய கூட்டணி : ராமதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக