வியாழன், 2 செப்டம்பர், 2010

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்


சென்னை,  செப்.1: ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.÷இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அண்ணா நகரில் உள்ள இந்திய குடிமைப் பணி தேர்ச்சி மையத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்காக நடத்தப்படும், 2011-ம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் உள சார்புத் தேர்வுக்கு முழு நேரம் மற்றும் பகுதி நேர பயிற்சி நடைபெற உள்ளது.÷இதற்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த பட்டப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 21-வயது நிரம்பிய மாணவ,மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.÷இந்தப் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும்பொருட்டு, அக்டோபர் 31-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள தகுதியுள்ள மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வருக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கருத்து
இ.ஆ.ப., இ.கா.ப., பயிற்சி என்பது அப்பணிகளுக்குத் தெரிவு செய்யப்பெற்றவர்களுக்கு வழங்கப்படுவது. இச் செய்தியில் குறிப்பிடுவது அப்பணிகளுக்கான தேர்விற்கான பயிற்சி ஆகும். எனவே, தேர்வுப் பயிற்சி என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 5:33:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக