லண்டன், ஆக. 27: நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துக்கு ஆபத்து என்ற அறிவிப்பு ஒலித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானி தவறான பட்டனை அழுத்தியதே இதற்கு காரணம். பொதுவாக விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலோ பயணிகளை எச்சரிக்கும் விதமாக, அவசர எச்சரிக்கை அறிவிப்பு பட்டன் ஒன்று பைலட்கள் கையாளும் வகையில் விமானத்தில் இருக்கும். அந்த பட்டனை அழுத்தினால் "விமானம் இப்போது ஆபத்தில் உள்ளது' என பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும். லண்டனில் ஹேத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை புறப்பட்டது. அதில் 275 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, விமானி கை தவறி எச்சரிக்கை பட்டனை அழுத்தி விட்டார். இதனால் "பயணிகள் கவனத்திற்கு...அவசர அறிவிப்பு...இப்போது விமானம் ஆபத்தில் உள்ளது' என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் கடலில் விழுந்து இறக்கப் போகிறோம் என்ற அச்சத்தில் செய்வதறியாது கண்கலங்கினர். தவறான பட்டனை பைலட் அழுத்தியதால் தவறு ஏற்பட்டுவிட்டது என்பதை விமானப் பணியாளர்கள் உணர்ந்தனர். இதை அடுத்து விமானப் பணியாளர்கள், பயணிகள் அமர்ந்திருந்த இருக்கை நோக்கி ஓடினர். ஒவ்வொரு இருக்கையாகச் சென்று பயணிகளிடம் விமானத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும், தவறுதலாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது என்றும் விளக்கம் அளித்தனர். இதை அடுத்து பயணிகளின் பயம் தெளிந்தது. அவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். பயணிகள் மனதில் பீதியை உண்டாக்கியதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இது குறித்து பயணிகள் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. இது தவறான அறிவிப்பு என்று விமானப் பணியாளர்கள் கூறிய பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்' என்றனர்.
கருத்துக்கள்
நடுவானில் எச்சரிக்கை அறிவிப்பு ஒலி எழுப்பப்பட்டதாகத் தினமணி செய்தி உள்ளது. மற்றொரு நாளிதழில் அவசர அறிவிப்பால் அவசர அவசரமாக விமானம் நிறுத்தப்பட்டுப் பயணிகள் மரண அச்சத்தில் குதித்து இறங்கியதில் பலருக்குப் படுகாயம் என்றும் எனவே விமான ஓட்டிகளையும் பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் வந்துள்ளது. எது உண்மை? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 6:24:00 AM
9/1/2010 6:24:00 AM
பேரிடர் நீங்கியது. கவலைப்பட வேண்டா. என மற்றொரு பதிவினை ஒலிபரப்பும் வண்ணம் விசை வைத்திருந்தால் எளிதில் அச்சத்தைப் போக்கியிருக்கலாமே! ஒவ்வோர் இருக்கைக்கும் சென்று காலங்கடத்த வேண்டாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 3:44:00 AM
8/29/2010 3:44:00 AM
aiyaa SRILANKAN.... neengathaan ingae sambanthamillamal pesukindreergal......
By ivinogbi
8/28/2010 5:54:00 PM
8/28/2010 5:54:00 PM
எந்தத் தலையங்கம் ஆனாலும் , தொடர்பில்லாமல் தமிழ் ஈழம் குறித்து கடிதங்களை சிலர் அனுப்புகின்றனர். தினமணி முதலில் இத்தககைய தொடர்பில்லாத கடிதங்கள் பிரசுரம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடிதங்கள் நெறியாளரின் ஆய்வுக்குப் பின்னரே வெளியாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டும்
By srilankan
8/28/2010 9:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
8/28/2010 9:29:00 AM