வியாழன், 2 செப்டம்பர், 2010

தலையங்கம்: சதை ஆடுகிறதே...!

பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும்,  தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை. இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே  பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது. நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
கருத்துக்கள்

வளர்மதி அவர்களே! thiru2050.blogspot.com வலைப்பூவின் தலைப்பில் எவ்வாறு தமிழில் கணியச்சிட வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. படித்துப் பின்பற்றிப் பயனுறுக! 2) மனித நேயத்துடன் எழுதப்பெற்ற ஆசிரியவுரை. சதை என்று சொல்வதை விடத் தசை என்பதே சரியானது. அதே நேரம் ஈழத்தில் மட்டும் ஏன் தான் ஆடாவிட்டாலும் இந்தியத்திற்குத் தன் தசை ஆட வில்லை? அவ்வாறு ஆடித் துடிக்கும் தமிழர்களையும் ஒடுக்குகிறார்கள். எனவே, உங்களது உரைதான் மனித நேயத்தில் அமைந்ததே தவிர இந்தியத்தின் நோக்கம் உதவி யல்ல. நாடகம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 7:15:00 AM
MANITHANEYAM , PAKKATHU VEETUKARAN THUNBA PATTAL IYO ENRU VARUNTHI UTHAVA VENDUM ENRA NABIGALARIN PONMOZHI NIRUBIKKAPADAVENDUM.
By J.ANBARASU
9/2/2010 7:05:00 AM
மதச் சார்பின்மை என்ற போர்வையில் இந்தியா ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக உருவாகும் வரை நமது அரசியல்வாதிகள் ஓயப் போவது இல்லை. இது நடக்கும் போது ஐயோ என அலறுவதைவிட இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுங்கள்.
By SIRAKU
9/2/2010 5:48:00 AM
Dear PA Valarmathi, You can download Azhagi software and u can use it by invoking Unicode editor available in it. It is a free download(azhagi.com)
By Indian Nation
9/2/2010 5:00:00 AM
//ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.// ஆஹா... சே.. இந்த மனிதப்பிறவி எத்தனை துயரமானது.என் மனம் நெக்குருகி கண்கள் பனித்தனவே. அங்கே நமது பங்காளிகளின்பால் எல்லாம் வல்ல எம்பெருமான் கருணை கொள்ளட்டும்
By Indian Nation
9/2/2010 4:57:00 AM
How to write in tamil, here?
By PA Valarmathi
9/2/2010 4:26:00 AM
How to write in tamil, here?
By PA Valarmathi
9/2/2010 4:25:00 AM
அவர்களது எண்ணிக்கை இருபது சதவிகிதத்தை தாண்டி விட்டால் வன்முறைகளையும், கலவரங்களையும் உருவாக்குவார்கள் எதியோபியா 33 % லெபனான் 59 %, அறுபது சதவிகிதத்தை தாண்டி விட்டால் , பிற இன மக்களை தண்டிப்பது, மிரட்டி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றச் செய்வது போன்ற செயல்கள் மூலம் முழுமையான இஸ்லாமிய நாடாக அதை மாற்ற கடுமையாக பாடுபடுவார்கள். கத்தார் 78 % மலேசியா 61 % சூடான் 70 % . இது தான் உலக அளவில் இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் நிலைப்பாடு. இப்படிப்பட்ட சமுதாயத்திடம் இருந்து தீவிரவாதத்தை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும். மதச் சார்பின்மை என்ற போர்வையில் இந்தியா ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக உருவாகும் வரை நமது அரசியல்வாதிகள் ஓயப் போவது இல்லை.
By akkinikkunju dindigul
9/2/2010 3:59:00 AM
உலகில் எந்த ஒரு நாட்டிலும் அதன் ஜனத்தொகையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக இஸ்லாமியர்கள் இருக்கும் வரை அமைதியானவர்களாக , இதர சமுதாயத்துடன் இணக்கத்துடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள். .உதாரணம் அமெரிக்கா ௦.6 % , ஆஸ்திரேலியா - 1 .5 % கனடா - 1 .9 % , சீனா 1 . 8 %. அவர்கள் மூன்று முதல் ஐந்து சதவிகிதமாக இருக்கும் போது குழுக்களாக சேர்வார்கள், உரிமைகள் குறித்து பேசத் தொடங்குவார்கள் தாய்லாந்த் 4 .6 %, ஜேர்மனி 3 .7 %. ஐந்து முதல் பத்து சதவிகிதமாக இருக்கும் போது அசாரதமான முறையில் மற்றவர்கள் மீது அதிகம் செலுத்தவும், சிறப்பு உரிமைகள் கோரி அரசை நிர்பந்திக்கவும் முயற்சி செய்வார்கள் பிரான்ஸ் 8 %, நெதர்லாண்ட்ஸ் 6 %. . பத்து சதவிகிதத்தை தாண்டி விட்டால் இதர சமுதாயத்தினரை ஓரம் கட்டவும் , தங்கள் மதத்தை நிலை நாட்டத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறவும் முயரசிகளை மேற்கொள்வார்கள். இந்திய 14 %, இஸ்ரல் 16 %,, ரஷ்யா 15 %, . அவர்களது எண்ணிக்கை இருபது சதவிகிதத்தை தாண்டி விட்டால் வன்முறைகளையும், கலவரங்களையும் உருவாக்குவார்கள் எதியோபியா
By akkinikunju
9/2/2010 3:57:00 AM
அது ஒரு நாடு அங்கு இருபவர்கள் மானிடர்கள் இல்லை மிருகங்கள் ஒரு நல்லவன் கூட பாகிஸ்தாநில் இல்லை
By சவுதில்இருந்து இந்திய நேசன்
9/2/2010 2:11:00 AM
Kudumi Dinamani paarppans advising other people is like devil talking about good things.
By ahamed
9/2/2010 2:10:00 AM
யாழ்.பொது நூலகத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் முன்னிலையில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தலை மீறி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈழ தமிழரின் உணர்வுகளை உடைத்தெறிந்தார் பேராசிரியர் சிற்றம்பலம்.
By kuru
9/2/2010 1:25:00 AM
யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. ஆனாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கவில்லை. அதில் தமிழர் தரப்பிற்கு எந்தவிதமான நன்மையும் விளையவில்லை. யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை. தமிழரை கொல்வதிலையே குறியாகவிருந்தது. இந்தியா யுத்தத்தின் இறுதித் தருணங்களில் ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் வெறுப்புற்றுள்ளனர்.
By kuru
9/2/2010 1:21:00 AM
யுத்தத்திற்குப் பின்னர் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புச் செய்யும் என்று சில‌ தமிழ் குழுக்கள் கட்சிகள் மக்கள் நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். அதனை இந்தியா செய்யவில்லை. தமிழரை ஒடுக்குவதிலையே ஆர்வம் காட்டுகிறது. ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்ததுள்ளது. இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது. அக்கறை இல்லாமல் இருக்கிறது. உரிய தீர்வுகளை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தத் தவறிவிட்டது. யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால், வடக்கில் இராணுவ குடியிருப்புகள், குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன சமநிலை பாதிப்படைகிறது. மீள்குடியேற்றம், எமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதாக இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்திய ஆளும் வர்க்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக கவலையடைவதாகவும் தெரிவித்தார்.
By kuru
9/2/2010 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக