ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ளங்கோவன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்


சென்னை, ஆக. 27: சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 6 காங்கிரஸ் நிர்வாகிகள் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழா கோவையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அவரது உருவம் பொறித்த நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுகிறார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இல்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் யுவராஜ் அறிவித்திருந்தார்.இந்நிலையில் யுவராஜ், புருஷோத்தமன், சாரதா செல்வம், இ.எம்.அனீபா, இருகூர் மனோகரன், முகவை ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர் என்றும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகச் செயலாளர் ஆர்.தாமோதரன் அறிவித்துள்ளார்.இளங்கோவன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவிடம் கேட்டபோது, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.
கருத்துக்கள்

கோவனை நீக்க முடியாமல் அவரின் ஆதரவாளர்களை நீக்கியுள்ளனர் எனில் பயனில்லை. கோவனை நீககுவதற்கான முதற்படி அல்லது எச்சிரிக்கைதான் இது எனில் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 4:04:00 AM
காங்கிரசுக்குத் தேவை டெல்லி பாதுஷக்களுக்குக் கால் நக்கும் அடிமைகள்! ஒருபக்கம் பார்த்தால் இளங்கோவனும் ஒரு தமிழ் இன விரோதி தான் ! தங்கபாலுவும் அப்படியே! சரி போகட்டும் ! இரண்டு துரோகிகள் அடித்துக் கொள்ள, ஒரு வடநாட்டுக் கொள்ளைக் கூட்டம் டெல்லியில் இருந்து வேடிக்கைப் பார்க்கிறது!
By karuppan
8/28/2010 1:45:00 PM
this is the hand work of thangabalu and co. they want to put jalra to Karunanidhi and eat his spits. in fact, these people have to be sent out from congress as they dont uphold the image of the party and loyal to Karunanidhi and Jayalalita
By Abhishtu
8/28/2010 12:07:00 PM
JAYA VALHA!ELANGO ANNAN VALHA!VALARHA!RAJIV VALHA1
By SUNDARAVADANAM
8/28/2010 9:38:00 AM
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சியிலிருந்து நீக்கம் ???
By raja
8/28/2010 7:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக