கோவை, ஆக. 28: தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மேலும் அவர் பேசியது: தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றில் 1950-70 வரையிலான காலகட்டத்தை சி.சுப்பிரமணியத்தைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. இவரைவிட நேருவுக்கு 21 வயது அதிகம். இவருடைய ஆலோசனைகளை நேரு கேட்டார் என்பதில் இருந்தே சி.எஸ்.சின் பெருமை தெரியும். ராஜாஜிக்கு பிறகு தமிழக முதல்வர் பதவிக்கு வர காமராஜருக்கும், இவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. காமராஜர் முதல்வரானார். சி.எஸ். போட்டியில் தோற்றார். ஆனாலும், சி.எஸ்.சை காமராஜர் தமது அமைச்சரவையில் சேர்த்து நிதி மற்றும் கல்வித் துறையை சி.எஸ்.சிடம் ஒப்படைத்தார். கல்விக்கு கண் திறந்தவர் காமராஜர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு கருவியாக இருந்து செயலாக்கம் கொடுத்தவர் சி.எஸ். தமிழகம் இன்று கல்வித் துறையில் முதன்மை பெற்ற மாநிலமாக திகழ்கிறது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். காங்கிரஸ் கட்சியால் இந்தியாவை ஆட்சி செய்ய முடிகிறது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உள்ளது. இந்த ஆதங்கம் 1969ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்த காலத்திலிருந்து எனக்கும் உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் இந்த ஆதங்கம் உள்ளது. மக்கள் கூட்டணி ஆட்சியையே விரும்புகின்றனர். தனிப்பட்ட ஒரு கட்சியை முழுமையாக நம்ப மக்கள் தயாராக இல்லை. நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி தான் நிலவுகிறது. தமிழகத்திலும் கூட்டணி தான் வெற்றிபெறும். அது காங்கிரஸ் கூட்டணியாக இருக்கும். அடுத்த தேர்தலுக்கு பிறகு அமையும் அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசாக இருக்கும் என்றார்.மூன்று கோஷ்டிகள் புறக்கணிப்பு: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.பிரபு ஆகியோரும் அவர்களது ஆதரவாளர்களும் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். பிரபுவின் ஆதரவாளரும், கோவை மேயருமான ஆர்.வெங்கடாசலம் விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றுவிட்டு சென்றுவிட்டார். பொதுக்கூட்டத்தில் தங்களது தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதனால், இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று வாசன் மற்றும் இளங்கோவன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்
கனவு காண யாவருக்கும் உரிமையுண்டு. நன்றாகக் கனவு காணுங்கள். ஆனால், மறைந்த தலைவரின் நினைவு போற்றும் விழாவில் கூடத்தங்களது குழுச் செல்வாக்கைக் காட்ட விரும்பும் காங்கிரசு ஆட்சிப் பொறுப்பில் ஏறினால் என்ன ஆகும் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் கேடு எனத் தெய்வப்புலவர் வழங்கிய அறிவுரையை உணருங்கள். ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன் எக்கட்சியில் இணைந்து போட்டியிட்டாலும் தமிழினப் பகையாளிகளை மக்கள் ஆட்சியில் அமர விட மாட்டார்கள். அதனைப் புரியாமல் ஆட்டம் போட்டு அழிய எண்ணாதீர்கள். திருந்தப் பாருங்கள். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பார்புகழ் பைந்தமிழ் நாடு! என்பதை முதலில் இலக்காகக் கொண்டு செயல்படுங்கள் எண்ணிய எய்தலாம்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 3:21:00 AM
8/29/2010 3:21:00 AM
அதி மேதாவி போல ஷோ காட்டும் அரை வேக்காடு ப.சிதம்பரம். இவர் அளவுக்கு ஒரு செயல்திறமையற்ற நிதியமைச்சரை இந்தியா இந்த 63 ஆண்டுகளில் கண்டதில்லை. இப்போது உள்துறையை ஒரு வழி பண்ணிக்கொண்டு இருக்கிறார். பத்திரிக்கைகளால் கோமாளியை போல சித்தரிக்கப்பட்ட சுப்ரமண்யம் ஸ்வாமியை போன்ற ஒரு திறமையான நிதியமைச்சரையும் பார்த்துவிட்டோம். பெரிய அறிவு ஜீவியை போல சித்தரிக்கப்பட்ட ப.சிதம்பரம் போன்ற வெத்து வேட்டையும் பார்த்துவிட்டோம். இப்பல்லாம் பேச தெரியாமல் பேசி, வாயை கொடுத்து நல்லா வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார்.
By A.G.Shanmugam
8/29/2010 2:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/29/2010 2:23:00 AM