கொழும்பு, ஆக.31- விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக கூறப்படும் 6 விமானங்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க எரித்திரியா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகேயுள்ளது எரித்திரியா. இந்நாட்டில் புலிகளுக்கு சொந்தமான 6 இலகு ரக விமானங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கே.பி. அளித்த தகவலின் பேரில் அந்த விமானங்களை கையகப்படுத்த இலங்கை அரசு முயற்சி எடுத்ததாகவும் அதற்கு எரித்திரியா மறுத்துவிட்டதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், அந்த விமானங்களை உரிமையாளர்களிடம் தான் ஒப்படைப்போம் என்று எரித்திரியா தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டியவற்றைக் கொலைகாரர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் ஒப்படைக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் எரித்திரியா அரசிற்குப் பாராட்டுகள். அரசை நடத்தும் தலைவர்கள் நீடூழி வாழ்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 5:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்8/31/2010 5:02:00 PM