சிங்கள-இநதிய உளவுப்படையால் பரப்பப்படும் தவறான கருத்து. இங்கிருந்து செல்பவர்கள் தமிழர் எதி்ர்ப்பு , தமிழர் அழிப்புப் பணிகள் தொடர்பாகத்தான் சென்று வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும் ஒப்பிற்காகக்கூட அங்கு செல்லும் செயலர் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைப்பினரைச் சந்திக்க வில்லை என்பது செல்பவர்களின்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. இத்தகைய சூழலில் நாட்டு மக்களுக்காகத் தங்கள உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் தேசியக் காவலர்களைத்தவறாக எழுதுவது பரதேசிகளால்தான் முடியும் என்பது வெளியிடப்பட்டுள்ள கருத்து மூலம் தெளிவாகிறது. மொழி இனக் காவலர்களாகத் திகழும் ஈழத்தமிழர்களும் அவர்களின் வீரத்தலைவர்களும் போராளிகளும் வெல்க! வெல்க! வெல்கவே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக